டி20 உலகக்கோப்பை : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தற்போதே கிடைத்த வரவேற்பு – வியக்க வைக்கும் தகவல்

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்த மாதம் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த டி20 உலக கோப்பை தொடரில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது.

aus 1

- Advertisement -

அதேபோன்று இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் விளையாட இருக்கின்றன. இப்படி அனைத்து நாடுகளும் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களின் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து அக்டோபர் 23-ஆம் தேதி விளையாட இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsPAK

இவ்வேளையில் தற்போதே இந்த போட்டியின் மீதான மோகம் உச்சத்தில் உள்ளது. கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்பட்டு வரும் இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்பொழுது நடைபெற்றாலுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான போட்டியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் முற்றிலும் விற்று தீர்ந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்த அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் – ஆசிய கோப்பையில் தோற்ற இந்திய அணிக்கு ஜாம்பவான் பெரிய ஆதரவு

ஐசிசி நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடரில் முற்றிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த முதல் போட்டியாக இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் இந்த தொடருக்காக மொத்தமாக விற்கப்பட்டுள்ளதாகவும், இனியும் டிக்கெட்டுகள் விற்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement