இந்த அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் – ஆசிய கோப்பையில் தோற்ற இந்திய அணிக்கு ஜாம்பவான் பெரிய ஆதரவு

IND vs SL
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. அதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில் சமீபத்தில் அதே துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கிய இந்தியா எளிதாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Avesh-Khan

- Advertisement -

ஆனால் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த இந்தியா வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் கடுப்பான ரசிகர்கள் இங்கேயே கோப்பையை கோட்டைவிட்ட இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் எங்கே உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலை தெரிவிக்கிறார்கள். அந்த நிலைமையில் அறிவிக்கப்பட்ட உலக கோப்பைக்கான இந்திய அணியை பார்த்து அவர்களது கவலை மேலும் அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் கவலை:
ஏனெனில் தோல்வியால் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியில் எந்த மாற்றமும் நிகழாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் வகையில் கிட்டத்தட்ட அதே அணி தான் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மேலும் காயத்தால் வெளியேறிய ஜடேஜா மற்றும் ரன்களை வாரி வழங்கி வெளியேறிய ஆவேஷ் கான் ஆகியோரைத் தவிர பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை.

IND

அதேபோல் திறமையான 4வது வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க நேரிட்டதை மறந்த தேர்வுக்குழு முகமது ஷமி மற்றும் தீபக் சஹர் ஆகியோரை வெறும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே சேர்த்துள்ளது. அதுபோக வாய்ப்புக்காக வருடக்கணக்கில் ஏங்கி தவிக்கும் சஞ்சு சாம்சனுக்கு பதில் வருடக்கணக்கில் சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறுவது உறுதியாகி விட்டதாகவும் நிறைய ரசிகர்கள் வெளிப்படையாக பேசுவதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

கவலை வேண்டாம்:
இந்நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணி நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முழுமையான திறமையும் உலகத்தரம் வாய்ந்த அனுபவமும் நிறைந்துள்ள இந்திய அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் மட்டும் கைகொடுத்தால் கோப்பை இந்திய மண்ணுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Gavaskar

“ஒவ்வொரு அணிக்கும் தேவைப்படும் அதிர்ஷ்டத்தை போல இந்த இந்திய  அணிக்கும் அதிர்ஷ்டம் கொஞ்சம் கை கொடுத்தால் நிச்சயமாக கோப்பையை வீட்டுக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு முன் எந்த முரண்பாடுகள் இருந்தாலும் தற்போது அணி தேர்வு செய்யப்பட்டு விட்டதால் அந்த இந்திய அணிக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுப்பது அவசியமாகும். அதை விட்டுவிட்டு ஒருசில வீரர்கள் தேர்வு செய்யப்படாததால் நாம் கேள்வி எழுப்பக்கூடாது. ஏனெனில் அது தேர்வு செய்யப்பட்ட வீரர்களை தரம் தாழ்த்திப் பேசுவது போன்றதாக அமையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சேவாக், கம்பீர், கெயில் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் 2022 : அட்டவணை, அணிகள் – எதில் பார்க்கலாம், முழுவிவரம்

அதாவது தேர்வு செய்யப்படாத வீரர்களுக்காக கவலைப்பட்டு குறை கூறுவதை விட்டுவிட்டு தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் திறமையை நம்பி அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அதிர்ஷ்டம் கொஞ்சம் கை கொடுத்தால் நிச்சயம் இந்த அணி கோப்பையை வென்று விடும் என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல சமீபத்திய ஆசிய கோப்பையில் டாஸ் என்பது வெற்றியை தீர்மானிப்பதாக அமைந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் அந்த அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு கைகொடுக்காததே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement