சேவாக், கம்பீர், கெயில் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் 2022 : அட்டவணை, அணிகள் – எதில் பார்க்கலாம், முழுவிவரம்

Gambhir
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக ஜாம்பவானாக உருவெடுக்கும் வீரர்கள் வயது காரணமாக ஓய்வு பெறுவதால் அவர்களது ஆட்டத்தை பார்க்க முடியாத நிலைமை ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. அந்த ரசிகர்களுக்கு விருந்து படைப்பதற்காகவும் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் சமீப காலங்களில் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் “லெஜெண்ட்ஸ் லீக் டி20” என்ற பெயரில் கடந்த வருடம் ஓமனில் முதல் முறையாக துவங்கிய புதிய டி20 தொடரில் இந்திய மஹாராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றன.

அதில் உலக ஜெய்ன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் அந்த தொடரின் 2வது சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இருப்பினும் இம்முறை அதே 3 அணிகள் வெவ்வேறு பெயர்களாக மாற்றப்பட்டு புதிதாக ஒரு அணியும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், மனிபால் டைகர்ஸ், பில்வாரா கிங்ஸ் ஆகிய 4 அணிகள் இம்முறை களமிறங்குகின்றன.

- Advertisement -

பார்மட் அட்டவணை:
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் லீக் சுற்றில் 2 முறை மோத வேண்டும். அதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபயர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். தோல்வியடையும் அணி 3வது இடம் பிடித்த அணியுடன் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற வகையில் இந்த தொடரின் பார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர். அதுபோக தற்போது நடைபெற்று வரும் ரோட் சேஃப்டி உலக சீரிஸ் தொடரில் பங்கேற்கும் சில ஜாம்பவான் வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த தொடரின் முதன்மை போட்டிகளுக்கு முன்பாக செப்டம்பர் 16ஆம் தேதியன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் விரேந்திர சேவாக் தலைமையிலான இந்திய மகாராஜாஸ் மற்றும் ஜேக் காலிஸ் தலைமையிலான உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கும் சிறப்பு போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் தான் சௌரவ் கங்குலி பங்கேற்பதாக இருந்து கடைசி நேரத்தில் விலகினார். இந்த தொடருக்கான அட்டவணை இதோ (இந்திய நேரப்படி):

- Advertisement -

1. செப்டம்பர் 16, இரவு 7.30 : இந்திய மகாராஜாஸ் V உலக ஜெய்ன்ட்ஸ், கொல்கத்தா
2. செப்டம்பர் 17, இரவு 7.30, இந்திய கேப்பிடல்ஸ் V குஜராத் ஜெய்ன்ட்ஸ், கொல்கத்தா
3. செப்டம்பர் 18, இரவு 7.30, மணிபால் டைகர்ஸ் V பில்வாரா கிங்ஸ், லக்னோ
4. செப்டம்பர் 19, இரவு 7.30, மணிபால் டைகர்ஸ் V குஜராத் ஜெயின்ஸ், லக்னோ
5. செப்டம்பர் 21, இரவு 7.30, இந்திய கேபிட்டல்ஸ் V பில்வாரா கிங்ஸ், லக்னோ
6. செப்டம்பர் 22, இரவு 7.30, மணிபால் டைகர்ஸ் V குஜராத் ஜெயின்ஸ், டெல்லி
7. செப்டம்பர் 24, இரவு 7.30, இந்திய கேபிட்டல்ஸ் V பில்வாரா கிங்ஸ், டெல்லி
8. செப்டம்பர் 25, மாலை 4.00, இந்திய கேப்பிடல்ஸ் V குஜராத் ஜெயின்ஸ், டெல்லி
9. செப்டம்பர் 26, இரவு 7.30, மணிபால் டைகர்ஸ் V பில்வாரா கிங்ஸ், கட்டாக்
10. செப்டம்பர் 27, இரவு 7.30, குஜராத் ஜெய்ன்ட்ஸ் V பில்வாரா கிங்ஸ், கட்டாக்
11. செப்டம்பர் 29, இரவு 7.30, இந்திய கேபிட்டல்ஸ் V மணிபால் டைகர்ஸ், கட்டாக்
12. செப்டம்பர் 30, இரவு 7.30, குஜராத் ஜெய்ன்ட்ஸ் V பில்வாரா கிங்ஸ், ஜோத்ப்பூர்
13. அக்டோபர் 1, இரவு 7.30, இந்திய கேபிட்டல்ஸ் V மணிபால் டைகர்ஸ், ஜோத்பூர்
அக்டோபர் 2, மாலை 4.00, குவாலிபயர், ஜோத்பூர்
அக்டோபர் 3, இரவு 7.30, எலிமினேட்டர்
அக்டோபர் 5, இரவு 7.30, பைனல்

எதில் பார்க்கலாம்: இந்த தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

அணிகள்:
குஜராத் கேபிட்டல்ஸ்: விரேந்தர் சேவாக் (கேப்டன்), கிறிஸ் கெயில், பார்திவ் படேல், அஜந்தா மெண்டிஸ், மன்விண்டர் பிஸ்லா, லெண்டில் சிம்மோன்ஸ் , ரிச்சர்ட் லெவி , மிட்செல் மெக்லீனாகன், ஸ்டுவர்ட் பின்னி, கெவின் ஓபிரைன், அசோக் டிண்டா, ஜோகிந்தர் சர்மா, கிரேம் ஸ்வான், கிறிஸ் ட்ரீம்லெட், எல்டன் சிக்கும்புரா

மணிபால் டைகர்ஸ்: ஹர்பஜன் சிங் (கேப்டன்), பவிண்டர் அவனா, விஆர்வி சிங் , இம்ரான் தாஹிர், பிரட் லீ, முத்தையா முரளிதரன், பிலிப் முஸ்தர்ட், முஹம்மத் கைப், ரியான் சைடுபாட்டம், லன்ஸ் க்ளுசெனர், டிமிரிதி மஸ்கேரேன்ஹஸ், ரொமேஷ் கழுவித்தாரனா, ரீதிண்டேர் சோதி, கோரி ஆண்டர்சன், டேரன் சம்மி .

இந்திய கேப்பிடல்ஸ்: கவுதம் கம்பிர் (கேப்டன்), லியாம் ப்ளன்கெட், ரஜத் பாட்டியா, ஹமில்டன் மசகட்சா, மஷ்ரபி மோர்தசா, ஜான் மூனி, ரவி போப்பாரா, பிரவின் தாம்பே, தினேஷ் ராம்டின், அஸ்க்கர் ஆப்கான், மிட்செல் ஜான்சன், ப்ரோஸ்பெர் உட்செயா, ராஸ் டெய்லர், ஜேக் காலிஸ், அஜந்தா மெண்டிஸ், பங்கஜ் சிங்

பில்வாரா கிங்ஸ்: இர்பான் பதான் (கேப்டன்), யூசுப் பதான், நிக் காம்ப்ட்டன், ஸ்ரீசாந்த், ஷேன் வாட்சன் , டிம் பிரஸ்னன், ஓவைஸ் ஷாஹ், மான்ட்டி பனேசர், நமன் ஓஜா, வில்லியம் போர்ட்ர்பீல்ட், பிடல் எட்வர்ட்ஸ், சமித் படேல், மாட் ப்ரியர், டினோ பெஸ்ட், சுதீப் தியாகி

Advertisement