சென்னையில் அஸ்வின் இருக்காரா.. ஆஸிக்கு எதிரான முதல் 2023 உ.கோ போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

- Advertisement -

ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதனால் சொந்த மண்ணில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி தயாராக இருக்கிறது என்றே சொல்லலாம்.

குறிப்பாக முக்கிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் கேஎல் ராகுல், பும்ரா போன்ற காயத்தை சந்தித்த வீரர்களும் முழுமையாக குணமடைந்து அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர். முன்னதாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய மூவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

கவாஸ்கர் லெவன்:
அதனால் எதிரணியில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்ட தேர்வுக்குழு 2023 கோப்பையில் காயத்தை சந்தித்த அக்சர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்தனர். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அஸ்வின் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாக உலகக் கோப்பைக்கான இறுதிக்கட்ட அணியில் அக்சர் பட்டேல் முழுமையாக ஃபிட்டாகாத காரணத்தால் அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் அஸ்வின் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்களை எடுத்து மிகப்பெரிய அனுபவம் கொண்ட அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தம்முடைய முதல் உலகக்கோப்பை போட்டியில் களமிறங்க உள்ளது. இருப்பினும் பிறந்து வளர்ந்த சென்னை மண்ணில் நடைபெறும் அந்தப் போட்டிக்கான தம்முடைய 11 பேர் அணியில் 3 ஸ்பின்னர்கள் விளையாடினால் மட்டுமே அஸ்வின் இருப்பார் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்தியா 2023 உ.கோ ஜெயிச்சுட்டா.. ரிட்டையராக இதை விட அவருக்கு நல்ல நேரம் கிடைக்காது.. ஏபிடி அதிரடியான கருத்து

“சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது மைதானம் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனெனில் உங்களிடம் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக அணியில் இருப்பார்” என்று கூறினார். கவாஸ்கர் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யதாவ், முகமது ஷமி/ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement