இந்தியா 2023 உ.கோ ஜெயிச்சுட்டா.. ரிட்டையராக இதை விட அவருக்கு நல்ல நேரம் கிடைக்காது.. ஏபிடி அதிரடியான கருத்து

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. அதில் உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.

மேலும் 5 ஐபிஎல் கோப்பை வென்ற அனுபவத்தை கொண்டிருப்பதால் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றியை பதிவு செய்ய தவறினார். எனவே 2011 அணியில் கூட இடம் பெறாத அவர் தற்போது 36 வயதாவதால் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக ஓய்வு பெறுவதற்கு போராட தயாராகியுள்ளார்.

- Advertisement -

ஏபிடி கருத்து:
மறுபுறம் ஏற்கனவே 2008 அண்டர்-19 உலகக் கோப்பை கேப்டனாக வென்ற விராட் கோலி 2011 உலகக்கோப்பை சரித்திர வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்து சாம்பியனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் தற்போது 34 வயதாகும் அவர் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான அந்தஸ்தை கொண்டிருப்பதால் இம்முறை இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் 2023 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் பணிச்சுமையை நிர்வகித்து கேரியரை நீட்டிப்பதற்காக ஒருநாள் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான சமயம் என்று அவருடைய நண்பர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2027 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா வருவதற்கு விராட் கோலி விரும்புவார் என்பதை நான் அறிவேன்”

- Advertisement -

“ஆனால் அதை இப்போதே உறுதியாக சொல்வது கடினமாகும். ஏனெனில் அதற்கு நீண்ட காலம் உள்ளது. எனவே இப்போதைய சூழ்நிலையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று விராட் கோலி சொல்வார். இருப்பினும் ஒருவேளை இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் “மிக்க நன்றி. அடுத்த சில வருடங்கள் ஐபிஎல் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி என்னுடைய கேரியரில் மகிழ்ச்சியுடன் செயல்படுவதற்கும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கும் செல்கிறேன். அனைவருக்கும் குட் பாய்” என்று அவர் சொல்வதற்கு மோசமான நேரமாக இருக்காது” என கூறினார்.

இதையும் படிங்க: நான் பாத்ததிலேயே இவர்தான் ரொம்ப டேஞ்சரான பவுலர். அவரை எதிர்த்து ஆடுறது ரொம்ப கஷ்டம் – ரோஹித் சர்மா வெளிப்படை

முன்னதாக குறிப்பிட்ட வயதிற்கு பின் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவேன் என்று ஏற்கனவே விராட் கோலி தெரிவித்துள்ளார். எனவே சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி விடை பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement