நான் பாத்ததிலேயே இவர்தான் ரொம்ப டேஞ்சரான பவுலர். அவரை எதிர்த்து ஆடுறது ரொம்ப கஷ்டம் – ரோஹித் சர்மா வெளிப்படை

Rohit-Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தற்போது தயாராக இருக்கிறது. இம்முறை இந்திய மண்ணில் உலகக்கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் இந்திய அணியே இம்முறை கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வரும் வேளையில் நேற்று செப்டம்பர் 28-ஆம் தேதி இந்திய அணியானது இந்த உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை உறுதி செய்தது.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பை இழந்த ரோகித் சர்மா அதன் பின்னர் தற்போது கேப்டனாகும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது இந்த கரியர் கடந்த 10 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்து வரும் வேளையில் அவரது தலைமையில் இந்திய அணி அண்மையில் ஆசிய கோப்பை தொடரினை கைப்பற்றியி அசத்தியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து மேலும் ஒரு வாய்ப்பாக இந்த உலக கோப்பையை கைப்பற்றும் பிரகாசமான வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒரு பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கெல்லாம் அவர் மிகவும் சாமர்த்தியமான பதிலை வெளிப்படுத்தினார். அந்த வகையில் ரோஹித்திடம் கேட்கப்பட்ட கேள்விகளாவது : கவர் டிரைவ் அடிப்பதில் சிறந்த டெக்னிக் வைத்திருப்பவர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் கூறுகையில் :

கவர் ட்ரைவ் என்றாலே விராட் கோலி தான். அவரைப் போன்று கவர் டிரைவை கச்சிதமாக யாராலும் அடிக்க முடியாது. ஸ்ட்ரைட் டிரைவ் : ஸ்ட்ரைட் டிரைவ் என்றாலே சச்சின் டெண்டுல்கர் தான். அவருடைய ஸ்ட்ரைட் டிரைவிற்கு நிகராக வேறு எந்த வீரராலும் ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்க முடியாது. வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் : என்னை பொருத்தவரை சுப்மன் கில் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது வயதில் இருக்கும் வீரர்களில் அவர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

பெஸ்ட் ஃபுல் ஷாட் : ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மிகச் சிறப்பாக புல் ஷாட் விளையாடக் கூடியவர். அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசிவிட்டால் அது பவுண்டரி என்று நினைத்துக் கொள்ளலாம். பெஸ்ட் ஸ்கூப் : சூரியகுமார் யாதவ் தான். அவர் ஸ்கூப் ஷாட் ஆடும்போது எதிரணி வீரர்களுக்கு நிச்சயம் அச்சம் ஏற்படும். அந்த அளவிற்கு அவர் அந்த ஷாட்டை சிறப்பாக விளையாடக் கூடியவர்.

இதையும் படிங்க : எவ்ளோ வரவேற்பு கொடுத்தாலும் நீங்க திருந்தமாட்டீங்க.. இந்தியா பற்றி குறைவாக பேசிய பாக் வாரிய தலைவரை – விளாசும் ரசிகர்கள்

கடினமான பவுலர் : என்னை பொறுத்தவரை நான் எதிர்கொண்டதில் மிகவும் சவாலான மற்றும் கடினமான பவுலர் என்றால் அது டேல் ஸ்டெயின் தான். ஏனெனில் அவருடைய திறன் மற்றும் வேகம் என அனைத்துமே என்னை தொல்லை செய்திருக்கிறது. மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் அவரால் ஸ்விங் செய்ய முடியும். அவருக்கு எதிராக விளையாடுவது கடினம் என்றாலும் அவரது பவுலிங்கிற்கு எதிராக விளையாட எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement