எவ்ளோ வரவேற்பு கொடுத்தாலும் நீங்க திருந்தமாட்டீங்க.. இந்தியா பற்றி குறைவாக பேசிய பாக் வாரிய தலைவரை – விளாசும் ரசிகர்கள்

Zaka Ashraf
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் 7வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளனர். அதிலும் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கடைசியாக கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் இந்திய மண்ணில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட வருடங்கள் கழித்து வந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 2023 ஆசிய கோப்பை விவகாரம் உட்பட பல்வேறு அம்சங்களிலும் தங்களுக்கு இணக்கமாக நடக்காத இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எம்மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று அந்நாட்டு ரசிகர்களிடம் ஒரு பதற்றம் இருந்தது. ஆனால் எப்போதுமே விருந்தினர்களை உபசரிப்பதற்கு தவறாத கலாச்சாரத்தையும் வழக்கத்தையும் கொண்ட இந்தியா விமானத்தின் வாயிலாக ஹைதராபாத் நகரை வந்தடைந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தது.

- Advertisement -

திருந்தாத தலைவர்:
சொல்லப்போனால் இந்திய வீரர்களுக்கு நிகராக விமான நிலையத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினருக்கு இந்திய ரசிகர்கள் இரு புறமும் நின்று ஆரவாரம் செய்து அட்டகாசமான வரவேற்பு கொடுத்தனர். மேலும் பேருந்தில் ஏறி செல்லும் வரை ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்த நிலையில் ஹோட்டலில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பன்னீர் தெளித்து கழுத்தில் துண்டு போட்டு மாலை அணிவித்து கலாச்சார முறைப்படி பிசிசிஐ சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதனால் மகிழ்ச்சியடைந்த பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களுக்கும் இந்தியாவுக்கும் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வாரிய தலைவர் ஜாகா அசரப் இந்தியாவை எதிரி நாடு என்று குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த 4 மாதங்களாக பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று செய்திகள் வந்த நிலையில் எதிரி நாட்டில் விளையாடும் நம் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக சம்பளம் உயர்த்தப்படுவதாக கூறிய அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “நம்முடைய வீரர்கள் எதிரி நாட்டிற்கு செல்லும் போது அல்லது எதிரி இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது அவர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான ஆதரவை நாம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:

அந்த வகையில் பகையை மறந்து நண்பனாக உற்சாக வரவேற்பு கொடுத்த இந்தியாவை எதிரி என்று வாரியத்தின் தலைவராக இருந்து கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக அவர் பேசியது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அதன் காரணமாக உங்களுக்கெல்லாம் எவ்வளவு தான் ஆதரவு வரவேற்பும் கொடுத்தாலும் திருந்த மாட்டீங்க என்று இந்திய ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement