அஷ்வினுக்கு இடம் இருக்கா? தெ.ஆ முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையில் வலுவான இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக இம்முறை டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செஞ்சூரியன் நகரில் நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்திய அணி எந்த மாதிரியான கலவையுடன் களமிறங்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏனெனில் தென்னாப்பிரிக்க மண்ணில் பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் 2 ஸ்பின்னர்கள் ஜோடியாக விளையாடுவது அரிதாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் லெவன்:
மேலும் முகமது ஷமி காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக இந்தியா யாரை களமிறக்கும் என்ற கேள்வியும் காணப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டிக்கான தம்முடைய 11 பேர் கொண்ட இந்திய அணியை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெளியிட்டுள்ளார். ஆச்சரியப்படும் வகையில் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் அப்போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய பிளேயிங் லெவன் மிகவும் எளிதாக இருக்கும். அதில் ஓப்பனர்களாக யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருப்பார்கள். 3வது இடத்தில் சுப்மன் கில் 4வதாக விராட் கோலி 5வது இடத்தில் கேஎல் ராகுல் விளையாடுவார்கள்”

- Advertisement -

“6வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கேஎல் ராகுல் இருப்பார்கள். அந்த 2 இடங்களில் அவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாறிக் கொள்ளலாம். பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் விளையாடுவார்கள். அதை தொடர்ந்து முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள்” என்று கூறினார். அந்த வகையில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாடுவது வெற்றியை கொடுக்கலாம் என்று கவாஸ்கர் கணித்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த 2 பேரும் வராங்க.. ஃபயர் தெறிக்கும்.. குத்துசண்டை மாதிரி இருக்கும்.. இந்தியாவை எச்சரித்த தெ.ஆ கோச்

அதே போல சுப்மன் கில்லுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் கேப்டன் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவதற்கு சரியானவர் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் கேஎஸ் பரத்துக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக அவர் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement