அந்த 2 பேரும் வராங்க.. ஃபயர் தெறிக்கும்.. குத்துசண்டை மாதிரி இருக்கும்.. இந்தியாவை எச்சரித்த தெ.ஆ கோச்

Shukri Conrad
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை காண்பித்தது.

அதை தொடர்ந்து நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாடுகிறது. அதனால் 1992 முதல் இதுவரை சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

குத்துசண்டை மாதிரி:
இந்நிலையில் தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை இந்தியாவிடம் தோற்காமல் இருந்து வரும் பெருமையான சாதனையை இம்முறையும் தக்க வைப்போம் என்று தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ரட் தெரிவித்துள்ளார். அதை விட லுங்கி நெகிடி மற்றும் காகிஸோ ரபாடா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களை நெருப்பாக செயல்பட்டு தெறிக்க விடுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இத்தொடர் குத்துச்சண்டை போல போட்டி மிகுந்த தொடராக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த இருவருமே எங்களுடன் தற்போது அணியில் இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே அவர்கள் புத்துணர்ச்சியாக நெருப்பாக செயல்பட தயாராக இருக்கிறார்கள்”

- Advertisement -

“அதே போல ஜெரால்ட் கோட்சி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குழந்தையாக இருக்கிறார். இருப்பினும் களமிறங்கிய தருணங்களில் எல்லாம் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே இது அவருக்கு மற்றொரு படியாக இருக்கும். அதிரடியான ஆக்ரோசத்தை அணியில் கொண்டு வரும் அவர் தென்னாப்பிரிக்கர்கள் பெருமைப் படக்கூடிய வேகத்தை கொண்டு வரக்கூடியவர். சமீப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்ட அனுபவத்தை அவர் இந்த டெஸ்ட் தொடரில் கொண்டு வருவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: என்னோட ஐ.பி.எல் விலை இவ்ளோ கம்மியானது ரொம்ப ஏமாற்றமா இருக்கு – இந்திய வீரர் விரக்தி

“வரலாற்றில் இந்தியா இங்கு வெற்றி பெற்றதில்லை என்பது தான் உண்மை. அதை இன்னும் பெரிதாக்க முயற்சிப்போம். அந்த பெருமைக்குரிய சாதனையை நிச்சயமாக நாங்கள் தக்க வைத்துக் கொண்டு தோல்வி நடக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புகிறோம். இத்தொடரில் பல போட்டிகள் உள்ளன. இந்த 2 போட்டிகளும் எங்களுக்கு அழுத்தமாக இருக்கும். 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கினால் நீங்கள் தொடரை வெல்ல முடியாது. அதே போல 1 – 0 என முன்னிலை பெற்றால் தொடரை இழக்கவும் முடியாது. எனவே இது ஒரு குத்துச்சண்டை போட்டி போல் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement