என்னோட ஐ.பி.எல் விலை இவ்ளோ கம்மியானது ரொம்ப ஏமாற்றமா இருக்கு – இந்திய வீரர் விரக்தி

Chetan-Sakariya
- Advertisement -

துபாயில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு போட்டி போட்டு வீரர்களை தேர்வு செய்தனர். அந்த வகையில் இந்த மினி ஏலத்தில் சில வீரர்களின் ஏலத் தொகையானது வியக்க வைக்கும் வகையில் இருந்தது.

குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்கை 24 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோன்று பேட் கம்மின்ஸ்ஸை 20 கோடியே 50 லட்சம் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

- Advertisement -

இப்படி வெளிநாட்டு வீரர்களை கோடி கணக்கில் நிர்வாகிகள் போட்டி போட்டு வாங்கினாலும் இந்திய வீரர்கள் பெரிய அளவில் தொகைக்கு செல்லவில்லை. குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் 11 கோடிக்கு பஞ்சாப் அணிக்காகவும், யாஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணிக்காகவும் சென்றனர். அவர்களை தவிர்த்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் பெரிய தொகையை பெறவில்லை.

அந்த வகையில் இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ள இளம் வீரர் சேத்தன் சக்காரியா 50 லட்சம் ருபாய் அடிப்படை விலையில் கொல்கத்தா அணிக்காக ஏலம் போனார். இந்நிலையில் இப்படி கொல்கத்தா அணிக்காக அடிப்படை தொகைக்கு ஏலம் போனது குறித்து பேசியுள்ள சேத்தன் சக்காரியா கூறுகையில் : குறைந்த தொகைக்கு ஏலம் போனது எனக்கு ஆச்சரியமாக இல்லை ஆனாலும் ஒருவித ஏமாற்றமாக இருந்தது.

- Advertisement -

ஏனெனில் டெல்லி அணியில் நான் கடந்த ஆண்டு 4 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டபோது என்னுடைய பந்துவீச்சு திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிகளவு பந்துவீசி இருந்தால் தான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தி என்னுடைய தரத்தை நிரூபித்திருக்க முடியும். ஆனால் அணியில் ஏற்கனவே இஷாந்த் சர்மா, ஆவேஷ் கான், முகேஷ் குமார் போன்ற வீரர்கள் இருந்ததால் எனக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க : அந்த பேட்ஸ்மேன்களை வெச்சு பிளான் ரெடி பண்றேன்.. தெ.ஆ அணியை சாய்க்க அஸ்வின் போடும் ஸ்கெட்ச்

இந்நிலையில் இந்த ஆண்டு ஏதாவது ஒரு அணி என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் கொல்கத்தா அணிக்காக அடிப்படை விலைக்கு சென்றது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் மிட்சல் ஸ்டார்க்குடன் இணைந்து செயல்பட இருப்பது உண்மையிலேயே எனக்கு ஒரு முக்கியமான தருணம் என சேத்தன் சக்காரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement