அந்த பேட்ஸ்மேன்களை வெச்சு பிளான் ரெடி பண்றேன்.. தெ.ஆ அணியை சாய்க்க அஸ்வின் போடும் ஸ்கெட்ச்

ravichandran ashwin 2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது. 1992 முதல் இதுவரை வரலாற்றில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றியை காணாத இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் அதை மாற்றி புதிய வரலாறு படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பொதுவாக தென்னாப்பிரிக்காவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் அவ்வளவு சுலபமாக விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் முதல் 3 நாட்கள் பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய பின்பு கடைசி 2 நாட்களில் மட்டுமே அவர்களால் ஓரளவு விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

- Advertisement -

அஸ்வின் பிளான்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி இன்னும் 11 விக்கெட்டுகள் எடுத்து 500 விக்கெட்களை தொட்டு சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இந்நிலையில் பவுமா, ஐடன் மார்க்ரம் போன்ற தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்பதை ஸ்ரேயாஸ் ஐயர், கில், ஜெய்ஸ்வால் ஆகிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசி பயிற்சிகளை எடுத்து வருவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக என்று வரும் போது நான் பவுமா அல்லது மார்க்ரம் ஆகியோரை கற்பனையாக நினைத்து பந்து வீசி வருகிறேன். எனவே நான் சுப்மன் கில் அல்லது ஸ்ரேயாஸ்க்கு எப்படி பந்து வீசுகிறேன் என்பது முக்கியமல்ல. வேகமான பந்துகளின் கோணத்தை நேராக மாற்ற முயற்சிக்கிறேன்”

- Advertisement -

“மெதுவான அவுட் சைட் ஆஃப் பந்துகளை ஸ்ரேயாஸ் தடுப்பாட்டம் செய்வார். சிறிது வேகமான பந்துகளில் எதிரணி பேட்ஸ்மேன்களால் சறுக்கலை பிடித்து ஷாட்டை அடிக்க முடியுமா என்பதை சோதிக்கிறேன். இப்போது நான் பழைய பந்தில் நிறைய வீசி வருகிறேன். அது புதிய பந்தை விட சிறப்பாக இருக்கிறது. இங்கே வரும் வெளிநாட்டு பவுலர்களுக்கு பயிற்சி போட்டிகள் என்பது மிகவும் முக்கியமாகும்”

இதையும் படிங்க: அவங்கள மாதிரி யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல.. இம்முறையும் ஜெயிக்க வைப்பேன்.. தாக்கூர் நெகிழ்ச்சி பேட்டி

“அதில் நான் எந்த லைன் பந்துகளை வீசுவது, தோள்பட்டையை எப்படி சுழற்றுவது, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி திட்டம் வகுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக ஜெயிஸ்வாலுக்கு எதிராக முதல் பந்தை நான் வீசினேன். அப்போது பந்தை ஸ்டம்ப் லைனில் வைக்க வேண்டும் என்பதில் என்னுடைய கவனம் இருந்தது. ஏனெனில் பிட்ச்சில் இருக்கும் ஈரம் பந்தில் தேய்ந்து போக வாய்ப்பிருப்பதால் அது திரும்புகிறதா அல்லது நேராக வருகிறதா என்று பேட்ஸ்மேனுக்கு தெரியாது. அதனால் ஷார்ட் லெக்கில் கேட்ச் கிடைக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement