அவங்கள மாதிரி யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல.. இம்முறையும் ஜெயிக்க வைப்பேன்.. தாக்கூர் நெகிழ்ச்சி பேட்டி

Shardul Thakur
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை எல்லாம் துபாயில் நிறைவு பெற்றது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை ஷார்துல் தாக்கூரை 4 கோடிக்கு சென்னை மீண்டும் வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் மும்பையை சேர்ந்த அவர் இந்தியாவுக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார்.

அதில் தோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் அதிக விக்கெட்டுகளை எடுத்து 3வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியதால் இந்திய அணிக்காக களமிறக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் 2021 காபா, ஓவல் போன்ற வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவரை ரசிகர்கள் லார்ட் தாகூர் என்று கொண்டாடினார்கள்.

- Advertisement -

சப்போர்ட் பண்ணாங்க:
அதை தொடர்ந்து 2021 சீசனிலும் சிறப்பாக விளையாடி 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவரை 2023 மெகா ஏலத்தில் விடுவித்த சென்னை மீண்டும் வாங்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டது. அதை தொடர்ந்து டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்காக பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு தோனிக்கு பதிலாக மற்ற கேப்டன்களின் கீழ் சுமாராக விளையாடிய அவர் மீண்டும் தற்போது சென்னைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2019 ஐபிஎல் ஃபைனலில் கடைசி பந்தில் ரன் எடுக்காமல் தோல்வியை பெற்றுக் கொடுத்தும் தமக்கு சென்னை நிறைய ஆதரவு கொடுத்ததாக தாக்கூர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தற்போது தம்மை மீண்டும் வாங்கியுள்ள சென்னையின் வெற்றிக்கு அடுத்த சீசனில் உதவுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி அஸ்வின் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மீண்டும் வாங்கியதை விட அவர்கள் ஒரு வீரராக என்னையும் என்னுடைய திறமைகளையும் நம்புகின்றனர். 2018 – 2021 வரை அவர்களுடன் நான் விளையாடியுள்ளேன். அந்த காலங்களில் என் மீது நிறைய முதலீடு செய்த அவர்கள் நிறைய வாய்ப்புகளையும் கொடுத்தனர். குறிப்பாக நிறைய மேடு பள்ளங்கள் இருந்தும் அவர்கள் தொடரின் கடைசி போட்டி வரை எனக்கு தொடர்ச்சியான ஆதரவு கொடுத்தனர். சொல்லப்போனால் நாங்கள் ஃபைனலில் தோல்வியை சந்தித்தோம். அதில் நான் சிறப்பாக விளையாடவில்லை”

இதையும் படிங்க: நான் யாருன்னு அவங்க 2 பேருக்கும் காட்டனும்.. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய – ஜெரால்டு கோட்ஸி

“இருப்பினும் அவர்கள் தொடர்ச்சியான ஆதரவு கொடுத்தனர். அதன் பின் 2 வருடங்கள் கழித்து அவர்களுடன் சாம்பியன் பட்டம் வென்ற அனுபவத்தை நான் சந்தித்தேன். சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்ற 2018, 2021 சீசன்களில் நான் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலராக இருந்தேன். அதை இம்முறை மீண்டும் ரிப்பீட் என்று கருதுகிறேன். சென்னையில் ரசிகர்களின் ஆரவாரம் அபாரமாக இருக்கும். குறிப்பாக தோனிக்காக அவர்கள் கொடுத்த ஆரவாரம் என்னுடைய வாழ்வில் நான் கேட்ட சத்தமான ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement