நான் யாருன்னு அவங்க 2 பேருக்கும் காட்டனும்.. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய – ஜெரால்டு கோட்ஸி

Gerald-Coetzee
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதோடு தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதனால் நிச்சயம் இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்டு கோட்ஸி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அப்படி அவர் அந்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும். நான் உலகத்தின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கு எதிராக என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் எப்பொழுதுமே போட்டியை விரும்பி விளையாடக்கூடிய ஒரு நபராகவே இருந்துள்ளேன். இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு எதிராக என்னை நான் பரிசோதிக்க நினைக்கிறேன்.

இதையும் படிங்க : நீங்கள் சொதப்புனா.. அவங்களால இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியாது.. விராட், ரோஹித்தை எச்சரித்த கம்பீர்

அவர்களுக்கு எதிராக நான் சவால் அளிக்கும் வகையில் பந்துவீச முயற்சிப்பேன். என்னைப் போன்ற பல வீரர்களை அவர்கள் எதிர் கொண்டிருப்பார்கள். அவர்கள் மிகவும் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் ஆனாலும் அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று நினைக்கிறேன். அதோடு இதுபோன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்துவீசும் போது நல்ல அனுபவம் கிடைக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement