நீங்கள் சொதப்புனா.. அவங்களால இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியாது.. விராட், ரோஹித்தை எச்சரித்த கம்பீர்

Gautam Gambhir 7
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது. ஆசிய கண்டத்திற்கு வெளியே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்தியா 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் ஒரு முறை கூட வென்றதில்லை.

எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொதுவாக வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பிறந்து வளர்ந்து விளையாடப் பழகிய இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக செயல்பட்டு வருவதே அங்கு சாதிப்பதற்கான தடையாக இருந்து வருகிறது.

- Advertisement -

எச்சரித்த கம்பீர்:
எனவே இம்முறையும் தென்னாப்பிரிக்க மண்ணில் சாந்திக்க வேண்டுமெனில் அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பது அவசியமாகிறது. ஏனெனில் தற்போது பும்ரா, சிராஜ் என இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் சாதிக்கும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்தவர்களாக முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

இந்நிலையில் தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுக்க தவறினால் பவுலர்கள் எவ்வளவு போராடினாலும் வெற்றி காண முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அழுத்தத்தில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்களிடம் அந்த அனுபவம் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் நம் பவுலர்கள் நிச்சயமாக உங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுக்க தவறினால் அதுவே பவுலர்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கும்.

இதையும் படிங்க: விராட் மாதிரி.. ரோஹித் அந்த வெறித்தனத்தை செய்ய மாட்டாரு.. 2022 சர்ச்சை பற்றி மஞ்ரேக்கர் கருத்து

“வேகம், பவுன்ஸ் ஆகியவற்றைக் தென்னாப்பிரிக்காவில் உங்களின் பேட்டிங் அழுத்தத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2011இல் இருந்த தென்னாபிரிக்க அணியின் பேட்டிங் தற்போது இல்லாமல் இருந்தாலும் ரபாடா, கோட்சி, மார்கோ யான்சென் ஆகியோரால் அவர்களின் பவுலிங் நன்றாகவே இருக்கிறது. மறுபுறம் இந்திய அணியில் முகமது ஷமி இருந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அதனால் தற்போது இந்திய பவுலர்களும் அழுத்தத்தில் விளையாடுவார்கள். குறிப்பாக சற்று இளமையாகவே இருக்கும் சிராஜ் பவுலிங் இந்த தொடரில் சோதனை செய்யப்படும்” என்று கூறினார்.

Advertisement