விராட் மாதிரி.. ரோஹித் அந்த வெறித்தனத்தை செய்ய மாட்டாரு.. 2022 சர்ச்சை பற்றி மஞ்ரேக்கர் கருத்து

Sanjay Manjrekar 6
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற அத்தொடரில் எப்படியாவது வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று மாபெரும் சரித்திரம் படைக்கும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட இந்திய அணி போராட உள்ளது.

முன்னதாக கடைசியாக கடந்த 2021/22இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவுக்கு அப்போதைய கேப்டன் விராட் கோலி 2வது போட்டியில் காயத்தால் வெளியேறினார். அதை பயன்படுத்தி 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா 3வது போட்டியிலும் வென்று 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

- Advertisement -

சர்ச்சை டெஸ்ட்:
அந்த 3வது போட்டியுடன் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது சர்ச்சையாக மாறியது. அதை விட செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுத்த டீன் எல்கரை முக்கிய நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். ஆனால் அதை ரிவியூ செய்த போது பந்து ஸ்டம்ப்பில் படாததால் முடிவு வாபஸ் பெறப்பட்டத்தை தொடர்ந்து விளையாடிய எல்கர் இந்தியாவை தோற்கடித்தார்.

இருப்பினும் கண்டிப்பாக அது அவுட் என்று கருதிய கேப்டன் விராட் கோலி அந்த முடிவை தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக மாற்றியமைத்ததாக சூப்பர் ஸ்போர்ட் எனப்படும் உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனத்தை நேரடியாக சென்று ஸ்டம்ப் மைக்கில் கடுமையாக விமர்சித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை நிகழ்ந்த அதே மைதானத்தில் தான் தற்போது இத்தொடரின் முதல் போட்டி துவங்க உள்ளது.

- Advertisement -

ஆனால் இம்முறை விராட் கோலி போல தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா அது போன்ற சம்பவங்களை செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக அது போன்ற சம்பவங்கள் இம்முறை நடைபெறாது. ஏனெனில் தற்போது எங்களுக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக இருக்கிறார். ஆனால் அது வரலாற்றில் நாங்கள் பார்த்திராத பழைய நினைவுகளை மீண்டும் கண்முன்னே கொண்டு வருகிறது”

இதையும் படிங்க: ஏலத்தில் காப்பாத்துன அவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்க.. ஆர்சிபி முட்டாள்தனத்தை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

“அதாவது அவர்கள் உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனம் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக விமர்சித்தனர். ஆனால் கடந்த முறை இருந்த அந்த அணி ஆக்ரோஷமானது. ரோஹித் சர்மா தலைமையிலான தற்போதைய அணி வித்தியாசமாக விளையாடக்கூடியது. பொதுவாக உங்களுடைய கேப்டன் தான் அது போன்ற கலாச்சாரத்தை உருவாக்குவார். எனவே ரோகித் சர்மா தலைமையில் இம்முறையும் அவ்வாறு நடப்பதை நாம் பார்க்கப் போவதில்லை” என்று கூறினார்.

Advertisement