ஏலத்தில் காப்பாத்துன அவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்க.. ஆர்சிபி முட்டாள்தனத்தை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகை விலை போன வீரராக சாதனை படைத்தார். அவருக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் 20.50 கோடிகளுக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிக்கு விலை போன முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை கேப்டனாக வென்று கொடுத்த அவர் நல்ல வேகப்பந்து வீச்சாளராக இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆர்சிபி’யின் முட்டாள்தனம்:
முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் பட் கமின்ஸை வாங்குவதற்காக ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. அதில் மொத்தமாகவே 23.50 கோடிகளை மட்டுமே கையில் வைத்திருந்த பெங்களூரு அவரை வாங்குவதற்காக 20 கோடிகள் வரை சென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் கடைசி வரை விடாத ஹைதராபாத் 20.50 கோடிகளுக்கு அவரை வாங்கியது. இந்நிலையில் 20வது கோடியில் ஹைதெராபாத் ஏலம் கேட்பதை நிறுத்தயிருந்தால் ஒரே வீரருக்காக தங்களுடைய மொத்த ஏலத் தொகையையும் பெங்களூரு கொடுத்திருக்க வேண்டும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அல்சாரி ஜோசப், டாம் கரண், யாஷ் தயாள் போன்ற வீரர்களை எப்படி உங்களால் வாங்கியிருக்க முடியும் என்று பெங்களூரு நிர்வாகத்திற்கு அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கண்மூடித்தனம் கலந்த முட்டாள்தனமாக நடந்து கொண்ட பெங்களூரு நிர்வாகத்தை ஹைதராபாத் காப்பாற்றியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பட் கமின்ஸை எவ்வளவு தொகையில் வேண்டுமானாலும் வாங்க வேண்டும் என்ற மனநிலையுடன் அவர்கள் தொடர்ந்து ஏலம் கேட்டனர். அதனால் 20 கோடி வரை சென்ற பின்பே இது சற்று அதிகம் என்பதை உணர்ந்து அவர்கள் கையை மடக்கினார்கள்”

இதையும் படிங்க: இந்த முறையும் அந்த பையனுக்கு வாய்ப்பில்லையா? என்ன தப்பு தான் அவரு பண்ணாரு – ரசிகர்கள் கேள்வி

“ஒருவேளை 20 கோடிக்கு வாங்கியிருந்தால் பட் கமின்ஸ் உங்களுக்காக இரு புறத்திலும் ஓவர்களை வீசுவாரா? ஒருவேளை அந்த இடத்தில் ஹைதராபாத் பின்வாங்கியிருந்தால் பெங்களூரு 20 கோடிகளை கொடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே நிறைய பவுலர்களை விடுவித்த நீங்கள் அந்த தொகைக்கு வாங்கியிருந்தால் கண்டிப்பாக சிறிய சின்னசாமி மைதானத்தில் பட் கமின்ஸ் நிறைய அடி வாங்கியிருப்பார். எனவே உங்களை காப்பாற்றிய ஹைதராபாத்துக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்கள்” என்று கூறினார்.

Advertisement