இந்த முறையும் அந்த பையனுக்கு வாய்ப்பில்லையா? என்ன தப்பு தான் அவரு பண்ணாரு – ரசிகர்கள் கேள்வி

Sarfaraz-Khan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களும் தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகின்றது. இந்த சுற்றுப்பயத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் அடைந்த நிலையில் இரண்டாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காரணமாக வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தென்னாப்பிரிக்க எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விரலில் காயம் அடைந்த ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடாத வேளையில் அவர் அங்கிருந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் மலை போல் ரன்களை குவித்து வரும் அவருக்கு டெஸ்ட் அணியிலாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகள் குவிந்து வரும் வேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க : நானும் மனுஷன் தான்.. தெ.ஆ தொடரில் வெளியேற இஷான் கிசான் சொன்ன காரணத்தால்.. பிசிசிஐ அனுமதி

இருப்பினும் இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் சர்பராஸ் கான் இடம்பெற்று விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement