நானும் மனுஷன் தான்.. தெ.ஆ தொடரில் வெளியேற இஷான் கிசான் சொன்ன காரணத்தால்.. பிசிசிஐ அனுமதி

Ishan Kishan 2
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது

முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து இசான் கிசான் தம்முடைய சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது. ஆனால் போட்டி மிகுந்த இந்திய அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் இவர் இப்படி சொந்த காரணங்களை சொல்லி வெளியேறியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

நானும் மனுஷன் தான்:
இருப்பினும் சொந்த காரணங்கள் என்பதால் ஒருவேளை தீபக் சஹர் போல இஷான் கிசான் குடும்பத்தில் ஏதோ பிரச்சினை கூட ஏற்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் மனதளவில் ஏற்பட்ட சோர்வு காரணமாகவே இந்த தென்னாபிரிக்க தொடரிலிஇருந்து வெளியேற தமக்கு அனுமதி கொடுங்கள் என்று பிசிசிஐ நிர்வாகிகளிடம் இசான் கிஷான் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸில் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி தெரிவித்தது பின்வருமாறு. “இஷான் கிசான் மனதளவில் சோர்வடைந்துள்ளதால் தமக்கு கிரிக்கெட்டிலிருந்து சில காலம் இடைவெளி வேண்டும் என்று அணி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டோம்” என்று கூறினார்.

- Advertisement -

இருப்பினும் 2023 உலகக் கோப்பை உட்பட இந்த வருடத்தில் பெரிய அளவிலான போட்டிகளில் இஷான் கிசான் இந்தியாவுக்காக விளையாடவில்லை. இந்த வருடம் அவர் 17 ஒருநாள், 11 டி20 உட்பட மொத்தமாக இந்தியாவுக்காக ஒரு மாதம் கூட விளையாடவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும் கடந்த ஜனவரியில் முதல் டிசம்பர் வரை இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்கள், 2023 சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் தொடர்ந்து இந்திய அணியுடன் இணைந்து இசான் கிசான் பயணித்தார்.

இதையும் படிங்க: எங்களுக்கு இதை விட எதுவும் ஸ்பெஷல் இல்ல.. ஹிட்மேன் ரோஹித் – கிங் கோலி ஜோடியாக பேட்டி

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 ஒருநாள் தொடர்கள், 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை உட்பட இந்த வருடம் விளையாடும் 11 பேர் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறவிட்டாலும் இந்தியா விளையாடிய பெரும்பாலான தொடர்களில் இசான் கிசான் அங்கமாக இருந்தார். எனவே நானும் மனுஷன் தானே என்ற வகையில் தற்போது மனதளவில் சோர்வடைந்து அவர் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement