காரணம்ல்லாம் சொல்ல முடியாது.. இஷான் கிசானுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ.. நடந்தது என்ன?

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 43வது போட்டியில் மும்பையை 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி ஜேக் பிரேசர்-மெக்குர்க் 84, ஷாய் ஹோப் 41, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 48 ரன்கள் எடுத்த உதவியுடன் 257 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய மும்பை அணிக்கு இசான் கிசான் 20, ரோகித் சர்மா 8, சூரியகுமார் யாதவ் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் திலக் வர்மா 63, ஹர்டிக் பாண்டியா 46, டிம் டேவிட் 37 ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் 247/9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை தோல்வியை சந்தித்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ரசிக் சலாம் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

கிசானுக்கு அபராதம்:
அதனால் 9 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த மும்பை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்தது. மறுபுறம் 10 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த டெல்லி 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இந்நிலையில் இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து மும்பை வீரர் இசான் கிசானுக்கு 10% அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் அதற்கான தெளிவான காரணத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிடவில்லை. இருப்பினும் அந்த போட்டியில் 2.2 விதிமுறையை இசான் கிசான் மீறியதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுவாக வேண்டுமென்றே பிட்ச்சை பேட்டால் அடிப்பது அல்லது விளம்பர பதாகைகள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது அல்லது பவுண்டரி எல்லைகளை சேதப்படுத்துவது அல்லது உடைமாற்றம் அறையின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்துவது ஆகியவை 2.2 விதிமுறையில் அடங்கும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணத்திற்கு அல்லது துணிக்கு அல்லது வேறு ஏதேனும் பொருளுக்கு சேதத்தை விளைவிப்பதும் அடங்கும். அந்த வகையில் இந்தப் போட்டியில் முகேஷ் குமார் வேகத்தில் 20 ரன்களில் அவுட்டான இஷான் கிசான் அந்த கோபத்தில் பெவிலியன் திரும்பும் போது மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருளை சேதப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நாங்க 2 பேரும் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கனும்.. ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – கே.எல் ராகுல் பேட்டி

அதன் அடிப்படையில் 2.2 விதிமுறையை மீறியதால் அவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. மொத்தத்தில் தெளிவான காரணம் என்னவென்று சொல்லாமலேயே இசான் கிசானுக்கு இந்த தண்டனையை பிசிசிஐ சார்பில் ஐபிஎல் நிர்வாகம் வழங்கியுள்ளது. அதை இசான் கிசான் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement