அதை பாத்து வயிறு எரிஞ்ச இங்கிலாந்தை தோற்கடிச்சது மகிழ்ச்சியா இருக்கு.. சுனில் கவாஸ்கர் விமர்சனம்

Sunil Gavaskar 45
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் சொந்த மண்ணில் உங்களை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து அணியை தோற்கடித்த இந்தியா டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் 80களில் வருட சம்பளத்தை சரியாக பெறுவதற்கே தடுமாறிய இந்திய வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் வியக்க வைக்கும் பல கோடிகளை சம்பாதிப்பதை நினைத்து இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களின் வயிறு எரிவதாக ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதனாலேயே இந்த தொடரில் சுப்மன் கில் போன்ற இளம் இந்திய வீரர்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்தை சேர்ந்த மூத்த வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ததாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
எனவே இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடிப்பது ஆனந்தத்தை கொடுக்கும் என்று கடுமையாக விமர்சித்துள்ள கவாஸ்கர் இது பற்றி ஸ்போர்ட்ஸ்டார் இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம் என்ற வழக்கமான மனநிலையுடன் வந்த இங்கிலாந்து அணியை இளம் இந்திய அணி மொத்தமாக தோற்கடித்ததை பார்ப்பது எவ்வளவு பெரிய வேடிக்கை. அது பல்வேறு விமான நிலையங்களுக்கு செல்லும் இந்திய வாரிய அதிகாரிகளின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கிறது”

“ஆஸ்திரேலியர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஆஸ்திரேலியர்களுக்கு தங்க வாத்து ஒன்றை பார்க்கும் போது அடையாளம் காணவும் உதவுகிறது. ஐபிஎல் நிஜமாக ஒரு பெரிய தங்க வாத்து. 2வது அல்லது 3வது தர தடுப்பாட்டு வீரர்கள் என்று கெவின் பீட்டர்சன் வர்ணிக்கக்கூடிய ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி அவர்களுடைய பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்களும் வீட்டில் செய்வதை விட ஐபிஎல் தொடரில் அதிகமாக சம்பாதிக்கின்றனர்”

- Advertisement -

“இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடும் போது அடிக்கடி வாய்த் தகராறு ஏற்படுவதற்கு இதுவே காரணம். அதாவது ஐபிஎல் தொடரில் நிறைய இங்கிலாந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்து வாரியத்தால் திரும்பப் பெறப்படுகின்றனர். அது ஐபிஎல் உரிமையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது”

இதையும் படிங்க: கிங்’காக மாறிய பின்.. விராட் கோலி அதை மட்டும் சாதிக்காதது என்னால ஜீரணிக்க முடியல.. ஹர்பஜன் வருத்தம்

“ஐபிஎல் ஏலத்தின் இயக்கவியல் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் போது அவர்களில் சிலரால் இந்திய வீரர்கள் சிலர் வாங்கும் கட்டணத்தை வயிறு குலுங்க பார்க்க முடிவதில்லை. எனவே மற்ற அணிகளுடன் இந்தியா மோதுவதை விட இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அதிகமாக உதடுகள் பேசுவதை நீங்கள் பார்க்க முடியும். அதனால் தான் இங்கிலாந்தை வீழ்த்துவதில் மகிழ்ச்சி எப்போதும் அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement