கிங்’காக மாறிய பின்.. விராட் கோலி அதை மட்டும் சாதிக்காதது என்னால ஜீரணிக்க முடியல.. ஹர்பஜன் வருத்தம்

harbhajan singh 4
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விட இந்திய தேர்வுக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வலம் வருகின்றன. குறிப்பாக மெதுவான பிட்ச்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சற்று நிதானமாக விளையாடக்கூடிய அணுகுமுறையை கொண்ட விராட் கோலி பொருந்த மாட்டார் என்று தேர்வுக் குழு கருதுகிறது.

எனவே இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக அவரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி சிக்கூ என்ற பட்டப்பெயருடன் இளம் வீரராக இருந்த போது மட்டுமே 2011 உலகக் கோப்பையை வென்றதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜீரணிக்க முடியல:
ஆனால் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக உருவெடுத்து கிங் கோலியாக மாறிய பின் இன்னும் அவர் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாததை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். எனவே சமீபத்திய ஐசிசி தொடர்களில் நெருங்கி வந்தும் சாம்பியன் பட்டத்தை முத்தமிடாத விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடி இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஹர்பஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விரைவில் ஐபிஎல் வருகிறது. அதைத் தொடர்ந்து உலகக் கோப்பை நடைபெறுகிறது. அதில் விராட் கோலி தன்னுடைய பேட்டால் முன்பை விட சத்தமாக பதிலடி கொடுப்பார். அவர் விராட் கோலியாக இருந்த போது உலகக் கோப்பையை வெல்லவில்லை. சீக்கூவாக இருந்த போது வென்றார். இளம் வீரராக முதல் முயற்சியிலேயே அவர் உலகக் கோப்பையை வென்றது வேடிக்கையானது”

- Advertisement -

“ஆனால் அங்கிருந்து மிகப்பெரிய வீரராக உருவெடுத்த விராட் கோலி உலகக் கோப்பையை வெல்லாத வீரராகவே இருக்கிறார். 2015, 2019 ஆகிய வருடங்களை தொடர்ந்து 2023இல் அவர் விளையாடினார். ஆனால் கோப்பை நாட்டுக்கு வரவில்லை. எனவே அதை நினைத்து அவரும் சற்று புலம்பலாம். விராட் கோலி போன்ற வீரர் உலகக் கோப்பையை வெல்லாதது என்னால் ஜீரணிக்க முடியவில்லை”

இதையும் படிங்க: விராட் கோலியை கடந்த ரோஹித் சர்மா மாற்று ஜெய்ஸ்வால்.. வெளியான புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

“எத்தனை சாதனை படைத்தாலும் ரன்கள் அடித்தாலும் அவரிடம் வெற்றிக்கான பசி தீராது என்பதை நான் அறிவேன். இருப்பினும் ஒவ்வொரு வீரரின் மிகப்பெரிய லட்சியம் உலகக் கோப்பையை வெல்வதாகும். சாதனைகள் உங்களுடன் கடைசி வரை இருக்கும். ஆனால் மக்கள் சாதனைகளை நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் நீங்கள் எத்தனை கோப்பைகளை வென்றீர்கள் என்பதை மட்டுமே மறக்காமல் வைத்திருப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement