விராட் கோலியை கடந்த ரோஹித் சர்மா மாற்று ஜெய்ஸ்வால்.. வெளியான புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

Jaiswal-and-Rohit
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே மூன்றாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இரண்டு இடங்கள் பின்தங்கி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேவேளையில் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விராட் கோலி தாண்டி இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாத விராட் கோலி தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் வேளையில் ரோகித் சர்மா ஆறாவது இடத்தையும், ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இதையும் படிங்க : ஐசிசி தரவரிசையில் நட்சத்திர வீரரை முந்திய அஸ்வின் சாதனை.. கிங் கோலியை மிஞ்சி சாதித்த ஜெய்ஸ்வால்

அதேவேளையில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா ஏழாவது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்த வரை ஜடேஜா முதல் இடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement