- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த தோல்விக்கான பழியை போட்டு ரோஹித், கோலியை ரிட்டையராக வெச்சுட்டீங்க.. கவாஸ்கர் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அவர்கள் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை. அதிலும் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

அதே போல முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி எஞ்சிய போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தார். அந்த வகையில் இந்தியாவில் தோல்விக்கு காரணமான அவர்கள் ஓய்வு பெற வேண்டுமென்ற விமர்சனங்களை சந்தித்தனர். இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை இந்தியா வெல்ல அவர்கள் இருவருமே முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

ஒன்றாக ஓய்வு:

அதன் காரணமாக அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு புதிய இந்திய அணியை உருவாக்க விரும்புவதாக தெரிகிறது. அதனால் ரோஹித் சர்மாவை கழற்றி விட தேர்வுக்குழுவுக்கு கௌதம் கம்பீர் பரிந்துரைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதனால் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் விடை பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் சந்தித்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா மீது பழியைப் போட்டு ஓய்வு பெற வைத்து விட்டதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஏனெனில் அந்தத் தொடரில் பெரும்பாலான வீரர்கள் சுமாராகவே விளையாடியதாக அவர் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பின் நிறைய வீரர்கள் மீது கேள்வி எழுப்பப்பட்டது. ஓரிரு வீரர்கள் மீது மட்டுமல்ல. முதல் போட்டியில் வென்ற பின் ஆஸ்திரேலியாவில் 3வது முறையாக இந்தியா வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். அது நடைபெறாததால் கேள்விகள் எழுப்பப்பட்டன. அது போன்ற நிலைமையில் நீங்கள் உங்களுடைய திறன், தொடர்ந்து விளையாடலாமா என்பது போன்ற விஷயங்களில் கேள்வி எழுப்புகிறீர்கள்”

இதையும் படிங்க: மே 17இல் துவங்கும் ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகள்.. பிளே ஆஃப், ஃபைனல் எப்போது? வெளியான அட்டவணை

“இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் அவர்கள் விளையாடுவதை விரும்பினர். ஒருவேளை நீங்கள் ஓய்வு முடிவை எடுக்க விரும்பினால் அதை உங்களால் மட்டுமே முடியும். ஒருவேளை இங்கிலாந்து தொடர் 3 போட்டிகளாக மட்டும் இருந்திருந்தால் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் 5 போட்டிகள் 6 வாரங்கள் இடைவெளி இல்லாமல் நடைபெறும். அதனாலயே அவர்கள் ஓய்வு முடிவை எடுத்திருக்கக்கூடும்” என்று கூறினார்.

- Advertisement -