ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 58 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குறிப்பாக தரம்சாலாவில் 58வது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென மின்விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டது.
மைதானத்திலிருந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றினார்கள். அதைத் தொடர்ந்து சில நாட்களாக நீடித்து வந்த இந்தியா – பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்தது. அதனால் தற்போது சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகளை நடத்த உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மீண்டும் துவங்கும் ஐபிஎல்:
அதன் படி வரும் மே 17ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் 2025 தொடர் மீண்டும் துவங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்று போட்டிகளான குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் ஃபைனல் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3ஆம் தேதி முடியும் ஐபிஎல் 2025 தொடரின் எஞ்சிய அட்டவணை பின்வருமாறு.
மே 17 இரவு 7.30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு
மே 18 மதியம் 3.30: ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ், ஜெய்ப்பூர்
மே 18 இரவு 7.30: டெல்லி கேப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ், டெல்லி
மே 19 இரவு 7.30: லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதெராபாத், லக்னோ
மே 20 இரவு 7.30: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி
பிளே ஆஃப் தேதிகள்:
மே 21 இரவு 7.30: மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை
மே 22 இரவு 7.30: குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், அகமதாபாத்
மே 23 இரவு 7.30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு
மே 24 இரவு 7.30: பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் ஜெய்ப்பூர்,
மே 25 மதியம் 3.30: குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்
இதையும் படிங்க: கங்குலி இந்தியாவின் முதுகெலுப்பு, தோனி அமைதி.. ஆனா கிங் கோலி பற்ற வெச்சது வேற.. சேப்பல் ஸ்பெஷல் பாராட்டு
மே 25 இரவு 7.30: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி
மே 26 இரவு 7.30: பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், ஜெயய்ப்பூர்
மே 27 இரவு 7.30: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,
மே 29 இரவு 7.30: குவாலிபயர் 1
மே 30 இரவு 7.30: எலிமினேட்டர்
ஜுன் 1 இரவு 7.30: குவாலிபயர் 2
ஜுன் 3 இரவில் 7.30: ஃபைனல்



