கங்குலி இந்தியாவின் முதுகெலுப்பு, தோனி அமைதி.. ஆனா கிங் கோலி பற்ற வெச்சது வேற.. சேப்பல் ஸ்பெஷல் பாராட்டு

Greg Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை 46 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். அதை விட கேப்டனாக 68 போட்டிகளில் செயல்பட்ட அவரது தலைமையில் இந்தியா 40 வெற்றிகளைப் படைத்தது.

குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதை மறக்க முடியாது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாகவும் விராட் கோலி 2 சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு சௌரவ் கங்குலி முதுகெலும்பைக் கொடுத்ததாக முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சேப்பல் பாராட்டு:

அதைப் பின்பற்றிய தோனி அமைதி மற்றும் பொறுமைகளால் வெற்றிகளைக் குவித்ததாக அவர் பாராட்டியுள்ளார். ஆனால் விராட் கோலி இந்திய அணியை பற்றி எரியும் நெருப்பாக மாற்றியதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சேப்பல் பேசியது பின்வருமாறு. “கோலி நெருப்பை பற்ற வைத்தார். அவர் பழையக் கதையைக் கிழித்து புதியதை எழுதினார். குறிப்பாக வெளிநாடுகளில் வெற்றி பெறும் எதிர்பார்ப்பை உண்டாக்கினார்”

“விராட் கோலி நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆவார். வெற்றியை ஒரு அங்குலம் கூட கொடுக்காமல் எப்போதும் அதிகமாகக் கோரும் அவர் அதை எதிரணி அல்லது தமது அணி வீரர்களிடம் மட்டுமல்ல தன்னிடமே கேட்பார். 2018 – 19 ஆஸ்திரேலிய தொடர் அதற்கு ஒரு முடி சூட்டு விட்டு விழாவாக அமைந்தது. அதற்கு முன் ஆஸ்திரேலியாவில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை”

- Advertisement -

கிங் கோலியின் நெருப்பு:

“ஆனால் நம்மால் முடியும் என்று நினைத்த விராட் கோலி செய்து காட்டினார். புஜாரா தொடர் நாயகனாக இருந்தாலும் பெர்த் மைதானத்தில் பேய்த்தனமான பிட்ச்சில் விராட் கோலி அடித்த 123 ரன்கள் யுகங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய இன்னிங்ஸ். அது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்ம், ஒழுக்கம் சண்டை, நேர்த்தி, துணிச்சல் ஆகியவைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது”

“2 – 1 என்ற கணக்கில் வென்ற அவரைப் போல வேறு எந்த இந்திய கேப்டனும் வெளிநாட்டு மண்ணில் மேலாதிக்கத்தை செலுத்தியதில்லை. சச்சினுக்கு பின் அவரைப்போல வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒவ்வொரு கண்டத்திலும் தெளிவாக விளையாடியதில்லை.
சௌரவ் கங்குலி இந்தியாவுக்கு முதுகெலும்பை கொடுத்தார். தோனி அமைதியான கேப்டன்ஷிப் வாயிலாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவை டாமினேட் செய்ய வைத்தார்”

- Advertisement -

கலங்கரை விளக்கம்:

“ஆனால் புரட்சியாளரான விராட் கோலி களத்தில் சத்தத்துடன் நடந்தார். அடிக்கடி பேசி கடினமாக விளையாடினார். அனைத்து இந்திய வீரர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். துணைக் கண்டம் மட்டுமல்லாமல் லார்ட்ஸ், அடிலெய்ட், செஞ்சூரியன், கொல்கத்தா ஆகிய அனைத்து இடங்களிலும் ஒரே அச்சமற்ற இதயத் துடிப்புடன் முன்னேறி கொலோச்சினார்”

இதையும் படிங்க: 21ஆம் நூற்றாண்டின் இதயம்.. இந்தியாவின் சச்சினை போல கோலி ஜாம்பவான்.. கிரேக் சேப்பல் பாராட்டு

“வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் கிங் கோலி ஆட்சி செய்தார். கர்ஜனை மங்கிப்போன பின்பும் அவரது செல்வாக்கு உணரப்படும். அனைவரும் அந்தக் கிங்கை வாழ்த்துகிறார்கள். ஆதிக்கம் மற்றும் கண்ணியம் ஒன்றாக நடக்க முடியும் இன்று எங்களை நம்ப வைத்ததற்கு நன்றி விராட்” என கூறியுள்ளார்.

Advertisement