21ஆம் நூற்றாண்டின் இதயம்.. இந்தியாவின் சச்சினை போல கோலி ஜாம்பவான்.. கிரேக் சேப்பல் பாராட்டு

Greg Chappell 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை 46 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 30 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி இந்தியாவில் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளையாடிய அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அதே போல கேப்டனாக விராட் கோலி 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அவரது தலைமையில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

21ஆம் நூற்றாண்டின் இதயம்:

இருப்பினும் சமீப காலங்களில் தடுமாறிய விராட் கோலி தற்போது வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போல விராட் கோலி 21ஆம் நூற்றாண்டில் இந்திய கிரிக்கெட்டின் இதயமாக செயல்பட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலியின் ஓய்வு ஒரு இடி முழக்கத்தை போன்ற சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது கேரியர் திடம், நெருப்பு மற்றும் துணிச்சலான ஆட்சி போன்றது. அது சச்சின் டெண்டுல்கருக்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தியவரின் அத்தியாயத்தை மூடுகிறது. இந்தியாவின் கிரிக்கெட்டில் கலாச்சாரம் மற்றும் உளவியல் ரீதியாக விராட் கோலி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்”

- Advertisement -

சேப்பல் பாராட்டு:

“ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் ஒளிரும் இதயமாக இருந்த கோலி வெறும் ரன்களை மட்டும் எடுக்கவில்லை. அவர் எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்தார். சவால்களை சவால் செய்தார். மேலும் 21ஆம் நூற்றாண்டில் இந்திய அணியை தன்னம்பிக்கை மிகுந்த மற்றும் எதிரணிகளிடம் மன்னிப்பு கேட்காத அணியாக அடையாளப்படுத்தினார்”

இதையும் படிங்க: என்கிட்ட 2018 மாதிரி 5 சதமடிக்க போறேன்னு சொன்ன கோலி.. திடீர்னு ஓய்வாக அவங்க தான் காரணம்.. சரந்தீப்

“அவரது ஓய்வு புள்ளி விவர வெற்றிடத்தை மட்டுமல்ல, அணியில் நில அதிர்வு போன்ற மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவரைப் போன்ற மற்றொருவர் இது வரை இருந்ததில்லை” எனக் கூறினார். மொத்தத்தில் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நம்பப்பட்ட விராட் கோலி 10000 ரன்களை தொடாமலேயே ஓய்வு பெற்றது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement