- Advertisement -
ஆசிய கோப்பை

அவர் ரிட்டையரானதால் பாகிஸ்தான் நிம்மதியா இருப்பாங்க.. 2022 சம்பவத்தை மறக்காதீங்க.. கவாஸ்கர் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அப்போட்டியில் நடப்புச் சாம்பியனாக திகழும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்திய அணியில் பாகிஸ்தானை விட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர்.

மறுபுறம் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் சல்மான் ஆகா தலைமையில் புதிய அணியை களமிறக்கியுள்ளது. அவருடைய தலைமையில் சமீபத்திய போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தான் இம்முறை இந்தியாவையும் தோற்கடிக்க தயாராகியுள்ளது. இந்நிலையில் இம்முறை விராட் கோலி ஓய்வு பெற்றது பாகிஸ்தானுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நிம்மதியான பாகிஸ்தான்:

ஏனெனில் 2012 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய விராட் கோலி 183 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அது போல பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள அவர் இந்தியாவின் வெற்றி நாயகனாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்களை துரத்திய இந்தியா 31/4 என ஆரம்பத்திலேயே சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி – ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அவர் 82* (53) ரன்கள் விளாசி டி20 வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அப்படிப்பட்ட அவர் இம்முறை ஓய்வு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாதது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் வெளிப்படை:

“இம்முறை விராட் கோலிக்கு எதிராக பவுலிங் செய்ய மாட்டோம் என்பதில் பாகிஸ்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். ஏனெனில் அவரிடமிருந்து நாம் சில அற்புதமான இன்னிங்ஸ்களை பார்த்துள்ளோம். குறிப்பாக மெல்போன் மைதானத்தில் இந்தியா தோல்வியை சந்திப்பது போல் தெரிந்த சூழ்நிலையில் அவர் விளையாடிய இன்னிங்ஸை என்ன சொல்வது”

இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவும் இல்ல.. பும்ராவும் இல்ல.. பாக் அணிக்கு எதிரான போட்டிக்கான துருப்பு சீட்டு இவர்தான் – கவாஸ்கர் கருத்து

“அப்போது சிறப்பாக விளையாடிய அவர் ஹரிஷ் ரவூப்க்கு எதிராக 2 நம்ப முடியாத சிக்சர்களை அடித்து இந்தியாவை வெற்றியை நெருங்க வைத்தார். கடைசியில் அஸ்வின் முடித்தார். எனவே ஆம், ஒருவேளை நான் பாகிஸ்தானியாக இருந்தால் இம்முறை விராட் கோலிக்கு எதிராக விளையாட மாட்டோம் என்பதால் எளிதாக மூச்சு விடுவேன். விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கிரிக்கெட்டராக சவாலைக் கொடுக்கக்கூடியவர்” என்று கூறினார்.

- Advertisement -