ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு துவங்க இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியை வீழ்த்தப்போவது இவர்தான் : சுனில் கவாஸ்கர் கணிப்பு
இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
இவ்வேளையில் பாகிஸ்தான் அணியையும் எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தும் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அசத்தப்போகும் இந்திய வீரர் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் வெற்றிக்கு மிக முக்கிய பங்கினை வகிப்பார் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற சூரியகுமார் யாதவ் முக்கிய பங்கிணை வகிப்பார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தும் விதம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற தொடரின் போது அவரும் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இப்படி அணிக்கு தேவைப்படும்போது பேட்ஸ்மேன்களையும் அவர் பந்துவீச அழைக்கிறார். இப்படி முக்கியமான வேளைகளில் அவர் எடுக்கும் முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து வருகின்றன. அவரது ஸ்மார்ட் கேப்டன்சி இந்த ஆசிய கோப்பை தொடரிலும் நீடித்து வருகிறது. அதனால் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : பும்ராவுக்கும் அந்த பாக் வீரருக்கும் இடையேயான மோதலை காண ஆவலாக காத்திருக்கிறேன் – இர்பான் பதான் கருத்து
என்னை பொறுத்தவரை இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் அசத்தலான முடிவுகளை கையில் எடுப்பார். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான வெற்றியில் அவரது பங்கு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



