துபாய் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் நடப்பு 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன. ஐசிசி சார்பில் நடத்தப்படும் பொதுவான தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருவதால் இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ஓராண்டு கழித்து நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
பும்ராவுக்கு எதிராக பாக் வீரர் விளையாடுவதை காண காத்திருக்கிறேன் : இர்பான் பதான்
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு எதிராக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக ஃபகார் சமான் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்பதை காண ஆவலாக காத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த போட்டியின் போது ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார். அவருடைய கண்ட்ரோல் மற்றும் லைன் அன்ட் லென்த் என அனைத்துமே அற்புதமாக இருந்தது. அவருக்கு எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்பது நன்றாகவே தெரியும். எப்போதுமே அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்.
அந்த வகையில் இந்த போட்டியிலும் அவர் அற்புதமாக பந்து வீசுவார் என்று நினைக்கிறேன். அதேபோன்று பகார் ஜமான் மிக வேகமாக ரன்களை குவித்து போட்டியை அதிரடியாக கொண்டு செல்லக்கூடிய திறமை படைத்தவர். எனவே இவ்விரு வீரர்களுக்கும் இடையேயான அந்த மோதல் எவ்வாறு இருக்கும்? என்பதை காண காத்திருக்கிறேன். அதேபோன்று பகார் சமானுக்கு எதிராக குல்தீப் யாதவ் நல்ல தாக்குதலை நிகழ்த்துவார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் அவர் ஏற்கனவே பகார் ஜமானை ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை வீழ்த்தியுள்ளார். அதனால் அவர்களுக்கு இடையேயான மோதலும் சிறப்பாக இருக்கும் என இர்பான் பதான் கூறியுள்ளார். சர்வதேச போட்டிகளை பொருத்தவரை பாகிஸ்தான் வீரரான ஃபகார் ஜமானுக்கு எதிராக பும்ரா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பந்துவீசி உள்ளார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆதிக்கம் செலுத்தப்போகும் 2 இந்திய பவுலர்கள் இவர்கள் தான் – ஆகாஷ் சோப்ரா
ஆனால் அப்படி அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே அவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதேபோன்று பும்ரா இதுவரை பகார் ஜமானுக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடியதே கிடையாது. எனவே இம்முறை அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்தினால் அது சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



