இப்படியே ஆடுனா அவரே வந்தாலும் உங்களுக்கு டி20 உ.கோ சான்ஸ் கிடைக்கும்.. இளம் வீரருக்கு கவாஸ்கர் ஊக்கம்

Sunil Gavaskar 8
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்கு தயாராக தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா ஆரம்பத்திலே கோப்பையை வென்றுள்ளது.

இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 14 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்து விளையாடி வருகிறார்கள். ஆனால் அவர்களை மிஞ்சும் அளவுக்கு முதல் போட்டியில் 60* ரன்கள் 1 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற சிவம் துபே 2வது போட்டியில் 63* ரன்கள் 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றி அபார கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
கடந்த 2019இல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட அவர் கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 411 ரன்கள் குவித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதனால் ஃபார்முக்கு திரும்பி பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் தற்போது இந்திய அணியிலும் அசத்தி வருவதால் ஹர்டிக் பாண்டியாவுக்கு போட்டியாக 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாக வேண்டும் என்பது சில ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் இதே போல செயல்பட்டால் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தாலும் உலகக்கோப்பையில் தேர்வாக துபேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சுனில் கவாஸ்கர் ஊக்கத்தை கொடுத்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா ஃபிட்டாகாமல் போனால் மட்டுமே அவருக்கு வாய்ப்புள்ளதாக நாம் பேசி வருகிறோம்”

- Advertisement -

“ஆனால் பாண்டியா ஃபிட்டாகி வந்தாலும் உலகக் கோப்பை விமானத்தில் பறப்பதற்கான வேலையை துபே செய்வது வருவதாக நான் கருதுகிறேன். இது போன்ற செயல்பாடுகளை நீங்கள் வெளிப்படுத்தினால் கண்டிப்பாக உங்களை அணியிலிருந்து நீக்குவது கடினமாகி விடும். அவரை நீக்குவது தேர்வுக் குழுவுக்கு கடினமான முடிவாக இருக்கும். தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யும் அவர் தற்போது தேர்வுக் குழுவுக்கு தொல்லையை கொடுக்கிறார்”

இதையும் படிங்க: ரசிகனா சொல்றேன் உங்களுக்கு அது செட்டாகாது விட்ருங்க.. கிங் கோலிக்கு ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

“இந்த 2 போட்டிகளுக்கு பின் தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த வீரராக முன்னேறியுள்ளதாக நான் கருதுகிறேன். 2 சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் அவர் சக அணி வீரர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது தன்னுடைய ஆட்டத்தில் கச்சிதமாக செயல்படும் அவர் யாரையும் காப்பி அடிக்க விரும்பவில்லை. இந்த வகையில் தான் நான் விளையாடுவேன் என்பதை அவர் அனைவருக்கும் காண்பிக்கிறார்” என்று கூறினார்.

Advertisement