ரசிகனா சொல்றேன் உங்களுக்கு அது செட்டாகாது விட்ருங்க.. கிங் கோலிக்கு ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

Aakash Chopra 5
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

முன்னதாக இத்தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாடி வருகிறார். அதில் முதல் போட்டியில் விளையாடாத அவர் இந்தூரில் நடந்த 2வது போட்டியில் 173 ரன்களை சேசிங் செய்யும் போது ரோகித் சர்மா டக் அவுட்டான பின் பேட்டிங் செய்ய வந்தார்.

- Advertisement -

வேணும் விடுங்க:
பொதுவாகவே நிதானமாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடக்கூடிய அவர் அந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்க ஆரம்பித்தார். அதனால் 29 (16) ரன்களை 182.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் தம்முடைய விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாட முயற்சித்ததால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் எடுத்தாலும் விராட் கோலி மெதுவாக விளையாடுகிறார் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. ஒருவேளை அதற்கு பதிலடி கொடுத்து 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பிடிப்பதற்காக அவர் இப்படி விளையாடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் யார் என்ன சொன்னாலும் உங்களுடைய ஸ்டைலில் விளையாடுங்கள் என்று விராட் கோலிக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் அதிரடியாக விளையாடும் போது உங்களால் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் பந்திலிருந்தே அவர் இறங்கி வந்து அனைத்து திசைகளிலும் அடித்தார். அவர் வித்தியாசமாக விளையாட முயற்சித்தார். இருப்பினும் விராட் கோலி தன்னுடைய இயற்கையான ஆட்டத்தாலேயே டி20 கிரிக்கெட்டில் 4000க்கும் மேற்பட்ட ரன்களை சுமார் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார்”

இதையும் படிங்க: ஒற்றை ஆளாக 404* ரன்ஸ்.. பிரையன் லாரா போல மிரட்டிய இளம் வீரர்.. யுவியின் 24 வருட சாதனை தகர்ப்பு

“எனவே அதே பாணியில் அவர் விளையாடினால் அணிக்கு நல்லதாகும். அதைத் தாண்டி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முயற்சித்தால் அவரால் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க முடியாது. ஒருவேளை அவர் தொடர்ச்சியாக ரன்கள் அடிக்காமல் போனால் ஒரு இந்திய ரசிகனாக நான் சற்று சோகமடைவேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடி தான் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை விராட் கோலி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement