- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மாடு மேய்க்கலாம் போலயே.. இந்தியர்கள் உங்கள மாதிரி அழ மாட்டோம்.. ஆஸிக்கு கவாஸ்கர் பதிலடி

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 9-1 என்ற நிலையில் உள்ளது. கவாஜா 2 ரன்களில் பும்ராவிடம் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் சாம் கோன்ஸ்டஸ் உள்ளார். முன்னதாக இந்த போட்டியின் பிட்ச்சில் முதல் நாளில் பார்ப்பதற்கு பச்சையாக தெரியும் அளவுக்கு அதிகபடியான புற்கள் இருந்தன.

- Advertisement -

மாடு மேயலாம்:

அப்படியே முதல் நாளில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவியது. அதை பயன்படுத்தி ஆஸ்திரேலியா பவுலர்கள் ஏற்கனவே தடுமாறும் இந்திய அணியை 185க்கு சுருட்டினார்கள். ஆனால் காலம் காலமாக பேட்டிங்க்கு சாதகமாக இருக்கக்கூடிய சிட்னி மைதானத்தின் பிட்ச் இவ்வளவு பச்சையாக இருந்து தாம் பார்த்ததில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் நேரலையில் தெரிவித்தார்.

அவருடன் வர்ணனை செய்த சுனில் கவாஸ்கர் இது தான் சமயம் என்று ஆஸ்திரேலியர்களை சாடியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் விளையாடிய ஜஸ்டின் லாங்கர் இப்படி பச்சையாக பிட்ச் இருப்பதை பார்த்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் அது பற்றி வேறு முன்னாள் இந்திய வீரர்கள் யாரும் புகார் அல்லது வினவுவதை நீங்கள் பார்க்க முடியாது”

- Advertisement -

“ஒருவேளை இந்தியாவில் பிட்ச்சில் புற்கள் நீக்கப்பட்டிருந்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அதை விமர்சிப்பார்கள். ஆனால் முன்னாள் இந்திய வீரர்கள் யாரும் வெளிநாடுகளில் இருக்கும் மைதானங்களை புகார் செய்வதில்லை. ஏனெனில் அவர்கள் வெளிநாடுகளில் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு விளையாட வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள்”

கவாஸ்கர் பதிலடி:

“நானும் சிட்னியின் பிட்ச்சில் கடந்த காலங்களில் இவ்வளவு புற்களை பார்த்ததில்லை. இந்த தொடரின் மற்ற மைதானங்களைக் காட்டிலும் இங்கே அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை இங்கே அடிக்க தடுமாறுகிறார்கள். சிட்னி பிட்ச்சில் மாடுகள் தன்னம்பிக்கையுடன் மேய்ந்திருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 6வது முறை.. தேவையின்றி வம்பிழுத்த கோன்ஸ்டஸ்.. உடனே தெறிக்க விட்டு மாஸ் பதிலடி கொடுத்த பும்ரா

மேலும் பச்சையாக இருப்பதன் காரணமாகவே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ரிசப் பண்ட் கைகளை தாக்கியதாகவும் கவாஸ்கர் தெரிவித்தார். எனவே இங்கு பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் விளையாட வேண்டும் என்றும் கவாஸ்கர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியாவை விரைவில் அவுட் செய்ய இந்திய அணி போராட உள்ளது.

- Advertisement -