6வது முறை.. தேவையின்றி வம்பிழுத்த கோன்ஸ்டஸ்.. உடனே தெறிக்க விட்டு மாஸ் பதிலடி கொடுத்த பும்ரா

- Advertisement -

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கும் நிலையில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா தமக்குத் தாமாக விலகிக் கொண்டார்.

அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் மீண்டும் தடுமாற்றமாக விளையாடி 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் உடம்பில் சில அடி வாங்கி போராடி 40 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 20, ஜெய்ஸ்வால் 10, ராகுல் 4, நிதிஷ் ரெட்டி 0, ஜடேஜா 26, சுந்தர் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

தேவையற்ற வம்பு:

கடைசி நேரத்தில் கேப்டன் பும்ரா அதிரடியாக 22 (17) ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4, ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா நங்கூரமாக விளையாட துவங்கினார். அப்போது நாளின் கடைசி ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார்.

அவருடைய 4வது பந்தை எதிர்கொண்ட கவாஜா வேண்டுமென்றே எதிர்கொள்ள கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார். மறுபுறம் பந்து வீசத் துவங்கிய பும்ரா என்ன ஆயிற்று? என்ற வகையில் ரியாக்சன் கொடுத்துக்கொண்டே மீண்டும் பவுலிங் செய்ய பின்னோக்கி நடந்தார். ஆனால் அவரிடம் எதிர்புறம் இருந்த சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி சில சொற்களை பேசினார்.

- Advertisement -

மாஸ் பதிலடி:

குறிப்பாக எங்கள் பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ள தயாராகும் வரை காத்திருந்து பந்து வீச முடியாதா? என்ற வகையில் அவர் சொல்லியிருக்கலாம் என்று காட்சியில் தெரிந்தது. ஏனெனில் பொதுவாகவே பும்ரா விக்கெட்டுகள் எடுத்தால் கூட அமைதியாக செல்லக்கூடியவர். அப்படிபட்ட தம்மிடம் ஏதோ சொன்னதால் கோபமடைந்த பும்ரா அவரிடம் வாக்குவாதம் செய்ய சென்றார்.

உடனடியாக நடுவர்கள் குறுகிட்டதால் பெரிய சலசலப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அதே ஓவரின் கடைசி பந்தில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அப்படியே திரும்பி எதுவுமே சொல்லாமல் கோன்ஸ்டஸை வெறித்தனமாக முறைத்து பார்வையால் மாஸ் பதிலடி கொடுத்தார். அப்படியே விராட் கோலி தலைமையில் இந்திய அணியினருடன் அவர் விக்கெட்டை வெறித்தனமாக கத்தி கொண்டாடினார்.

இதையும் படிங்க: 185க்கு ஆல் அவுட்.. இந்தியா 12 வருட மோசமான சாதனை ஸ்கோர்.. ரோஹித்தை பேட்டிங்கில் முந்திய பும்ரா

மறுபுறம் தேவையில்லாமல் வாய்விட்டு விட்டோமோ என்று கோன்ஸ்டஸ் அமைதியாக சென்றார். அவருக்கு மற்ற இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். மொத்தத்தில் பும்ராவிடம் இத்தொடரில் 6வது முறையாக கவாஜா அவுட்டான நிலையில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 9-1 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement