185க்கு ஆல் அவுட்.. இந்தியா 12 வருட மோசமான சாதனை ஸ்கோர்.. ரோஹித்தை பேட்டிங்கில் முந்திய பும்ரா

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் 2 – 1 முடிவில் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வங்கிக்கும் அந்த தொடரின் கடைசி போட்டி பிப்ரவரி 3ஆம் தேதி சிட்னியில் துவங்கியது. அதில் ரோகித் சர்மா தன்னைத்தானே நீக்கிக் கொண்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார்.

அதை அடுத்து களம் இறங்கிய இந்தியாவிற்கு ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக நிதானமாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் 10 ரன்னில் அவுட்டாகி முன்னேற்றத்தை காட்டவில்லை.

- Advertisement -

மீண்டும் சொதப்பல்:

அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். அதில் தன்னுடைய உடலில் அடிகளை வாங்கி நங்கூரமாக விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கடந்த போட்டிக்கு நாயகன் நிதிஷ் ரெட்டி இம்முறை கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

அப்படியே மறுபுறம் போராடிய ஜடேஜாவும் 26 ரன்னில் அவுட்டாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். இறுதியில் கேப்டன் பும்ரா 22 (17) ரன்கள் எடுத்தும் இந்தியாவை வெறும் 185 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4, ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

பும்ரா அசத்தல்:

இப்போட்டியில் பும்ரா அடித்த 22 ரன்கள் தான் இந்தத் தொடரில் இந்திய கேப்டன் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் கடந்த மூன்று போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா ஒரு முறை கூட 20 ரன்கள் தாண்டவில்லை. அந்த வகையில் ரோகித் சர்மா இந்த போட்டியில் தம்மைத்தானே பெஞ்சில் அமர வைத்துக் கொண்டது சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ரோஹித் மாதிரியே இவரையும் அனுப்புங்க.. அதிர்ஷ்டம் கிடைத்தும் கோட்டை விட்ட கோலியை விளாசும் ரசிகர்கள்

இருப்பினும் மற்ற பேட்ஸ்மேன்களும் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்ததால் 185க்கு ஆல் அவுட்டானதால் சிட்னி மைதானத்தில் 12 வருடங்கள் கழித்து 200 ரன்களுக்குள் அவுட்டான அணியாக இந்தியா மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2012இல் இந்தியா இங்கே 191க்கு அவுட்டானதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர். அதே சமயம் மறுபுறம் ரோகித்தை பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸ்லயே முந்திய பும்ரா பந்து வீச்சில் இந்தியாவின் வெற்றிக்காக போராட உள்ளார்.

Advertisement