WTC Final : எது நாங்க களைப்பா இருக்கோமா? இந்தியாவை குறைத்து பேசிய ரிக்கி பாண்டிங்கிற்கு – சுனில் கவாஸ்கர் பதிலடி

- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதியான இன்று இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளை பொறுத்த வரை கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

IND-vs-AUS

- Advertisement -

மறுபுறம் காலம் காலமாக ஐசிசி ஃபைனல்களில் வெற்றிகரமாக செயல்பட்ட காரணத்தாலேயே 5 உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வென்று சரித்திரம் படைக்க தயாராகியுள்ளது. இருப்பினும் கடந்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள இந்தியா 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த ஊரிலேயே தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்தியது.

பாண்டிங் பதிலடி:
எனவே அந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் இந்தியாவுக்கு கடந்த ஃபைனலில் ஃபார்மின்றி தவிர நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இம்முறை முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே போல் கடந்த ஃபைனலில் தடுமாறிய புஜாரா இதே இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் அசத்திய ரகானேவும் பழைய வீரராக வந்துள்ளார். மேலும் சுப்மன் கில் ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் நிலையில் ஊதா தொப்பியை வென்ற ஷமி நிகராக சிராஜ் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

Ponting

இது போக ரவீந்திர ஜடேஜா போன்ற பெரும்பாலான வீரர்கள் சமீபத்திய ஐபிஎல் தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இருப்பினும் ஷமி, சிராஜ் ஆகியோரை விட கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோரை கொண்ட தங்களுடைய பவுலிங் கூட்டணி வலுவானதாக இருப்பதுடன் தங்கள் நாட்டின் நிலவும் சூழ்நிலையே இங்கிலாந்தில் இருக்கும் என்பதால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதை விட ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் இப்போட்டியில் களைப்புடன் களமிறங்கும் அதே சமயம் கடந்த ஒரு மாதமாக ஆஸ்திரேலிய வீரர்கள் எந்த கிரிக்கெட்டிலும் விளையாடாததால் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார்கள் என்று தெரிவித்த அவர் அதன் காரணமாக தங்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிக இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் பாண்டிங் கருத்தை தாம் ஏற்கவில்லை என்று தெரிவிக்கும் இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதே ஐபிஎல் தொடரில் விளையாடாத புஜாரா இதே இங்கிலாந்து மண்ணில் அடுத்தடுத்த சதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Gavaskar

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் இந்தப் போட்டியில் இந்தியா வெல்லும் என சற்று அதிகப்படியான ஆதரவை கொடுக்கிறேன். மேலும் இங்கிலாந்தில் இருக்கும் கால சூழ்நிலைகள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதை நான் முற்றிலுமாக ஏற்க மறுக்கிறேன். அதே போல நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வெடுத்து இந்த போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவது பெரிய சாதகத்தை கொடுக்கும் என்று சொல்ல முடியாது”

இதையும் படிங்க:WTC Final : புஜாரா கவுண்டில மட்டும் தான் அடிப்பாரு, இந்தியாவுக்கு சொதப்புவாரு – புள்ளிவிவரத்துடன் முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

“ஏனெனில் இது போன்ற மிகப்பெரிய போட்டியில் நீங்கள் எப்படி களமிறங்கினாலும் மிகப்பெரிய அழுத்தத்தில் விளையாடுவீர்கள். அத்துடன் இது போன்ற பெரிய போட்டிகளில் நீங்கள் தொடர்ச்சியாக விளையாடிய சூழ்நிலையில் களமிறங்க வேண்டும். அந்த வகையில் இந்திய வீரர்கள் அதை செய்து நல்ல பயிற்சியுடன் முழுமையாக தயாராகி களமிறங்குகிறார்கள். சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் விளையாடாத ஒரே ஒரு வீரரான புஜாரா கவுண்டி தொடரில் ஜாலியாக சதங்களை அடித்தார். எனவே இப்போட்டியில் இந்தியா வலுவான சூழ்நிலையிலேயே களமிறங்குகிறது” என்று கூறினார்.

Advertisement