WTC Final : புஜாரா கவுண்டில மட்டும் தான் அடிப்பாரு, இந்தியாவுக்கு சொதப்புவாரு – புள்ளிவிவரத்துடன் முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

Pujara County
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதியான இன்று இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை அதிலிருந்து பாடத்தை கற்று கோப்பையை வென்று 2013க்குப்பின் 9 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Pujara County Steve Smith

- Advertisement -

மேலும் சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவை 2 முறை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்த இந்தியா இந்த முக்கியமான ஃபைனலில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த நிலையில் இம்முறை நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளதும் இளம் வீரர் சுப்மன் கில் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதும் இந்தியாவுக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களை விட இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு நவீன கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மனாக அறியப்படும் புஜாரா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவுக்கு சொதப்புவாரு:
கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் களத்தில் நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை எடுக்கும் ஸ்டைலை கொண்ட அவர் 2019/20இல் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். மேலும் 2020/21இல் பெரிய ரன்களை எடுக்க விட்டாலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு முக்கிய ரன்களை எடுத்து மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற உதவிய அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்ததால் கடந்த பிப்ரவரியில் அதிரடியாக கழற்றி விடப்பட்டார்.

Cheteswar Pujara.jpeg

அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட அவர் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து ஃபார்முக்கு திரும்பி கடந்த ஜூலையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் கம்பேக் கொடுத்தார். அத்துடன் கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் ஒரு வழியாக சதமடித்த அவர் அனைத்து இந்திய வீரர்களும் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடிய போது இந்த ஃபைனலுக்கு தயாராகும் வகையில் கடந்த 2 மாதங்களாக கவுண்டி தொடரில் விளையாடி மீண்டும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

எனவே விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோரை விட இங்கிலாந்தின் கால சூழ்நிலைகளில் கடந்த 2 மாதங்களாக விளையாடிய அவர் இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8416 ரன்களை 48.63 என்ற சராசரியில் எடுத்துள்ள நிலையில் அவரை விட வெறும் 6 போட்டிகளில் மட்டுமே குறைவாக விளையாடியுள்ள புஜாரா 7154 ரன்களை 44.31 என்ற சராசரியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

Chopra

குறிப்பாக கவுண்டி தொடரில் சதங்களை அடித்தாலும் ஆரம்பம் முதலே இங்கிலாந்து மண்ணில் தடுமாறும் புஜாரா 30க்கும் சராசரியை மட்டுமே கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “புஜாரா கவுண்டி தொடரில் ஏராளமான ரன்களை அடித்துள்ளார். சொல்லப்போனால் அதனாலேயே இந்திய அணியில் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். ஆனால் உண்மை என்னவெனில் விராட் கோலியை விட ஒரு சில போட்டிகளில் மட்டுமே குறைவாக விளையாடியுள்ள அவரின் புள்ளி விவரங்கள் அந்தளவுக்கு சிறப்பாக இல்லை. குறிப்பாக இங்கிலாந்தில் அவருடைய சராசரி 26 – 29 என்ற அளவில் தான் இருக்கிறது”

இதையும் படிங்க:WTC Final : அஸ்வின் – ஜடேஜா ரெண்டு பேருமே ஃபைனலில் விளையாடனும் – சச்சின் கூறும் முக்கிய காரணம் என்ன

“ரகானேவும் அவரைப் போன்ற சராசரியையே வைத்துள்ளார். அந்த இருவருமே நிறைய போட்டிகளில் விளையாடி சில சதங்களை அடித்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் நீண்ட காலமாக அவர்களுடைய பேட்டிங் சராசரி 30க்கும் குறைவாக இருப்பது சிறப்பானதல்ல” என்று கூறினார். அவர் கூறுவது போல இதுவரை இங்கிலாந்து மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 29.60 என்ற சுமாரான சராசரியிலேயே பேட்டிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement