WTC Final : அஸ்வின் – ஜடேஜா ரெண்டு பேருமே ஃபைனலில் விளையாடனும் – சச்சின் கூறும் முக்கிய காரணம் என்ன

Sachin Tendulkar
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதியான இன்று இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியன் தீர்மானிக்கும் இந்த போட்டியில் வென்று சமீப காலங்களில் இந்தியாவிடம் தங்களது சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

IND-vs-AUS

- Advertisement -

மறுபுறம் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தாலும் இம்முறை அதிலிருந்து கற்ற பாடத்துடன் களமிறங்கி கோப்பையை வெல்ல இந்தியா போராட உள்ளது. குறிப்பாக 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய இந்தியா இம்முறை இங்கிலாந்திலும் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சச்சின் ஆலோசனை:
முன்னதாக ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடந்த ஃபைனலில் மழை பெய்து ஈரமாக இருந்த கால சூழ்நிலையை தவறாக கணித்த இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் மீண்டும் அதே தவறை செய்யாமல் ஷமி, சிராஜ், உமேஷ் ஆகியோருடன் 4வது பவுலராக ஷார்துல் தாக்கூர் மற்றும் ஒரே ஒரு ஸ்பின்னராக பேட்டிங்கில் அஸ்வினை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜடேஜா விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன.

Ravindra-Jadeja

ஆனால் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் மட்டுமே சற்று சுழலுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக 1972இல் பிஎஸ் சந்திரசேகர் 6 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் முதல் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதே போல 2021இல் 50 வருடங்கள் கழித்து பதிவு செய்த வெற்றியில் ஜடேஜா முக்கிய பங்காற்றினார். அதனால் நல்ல ஆல் ரவுண்டர்களாக இருக்கும் அந்த இருவருமே சேர்ந்தார் போல் விளையாட வேண்டுமென ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களிலேயே ஓவல் இயற்கையாகவே சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கும் சச்சின் டெண்டுல்கர் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கான காரணத்தை விரிவாக விரித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஓவல் மைதானத்தில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஏனெனில் போட்டி நடைபெற நடைபெற ஓவல் மைதானத்தின் பிட்ச் நிச்சயமாக சுழல் பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும்”

Ashwin Sachin Tendulkar

“எனவே இப்போட்டியின் 2வது பகுதியில் ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வருவார்கள். பொதுவாக தாறுமாறாக சுழலும் பிட்ச்சில் மட்டுமே ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் பிட்ச்சில் லேசான நகர்வு இருப்பதே தாக்கத்தை ஏற்படுத்த போதுமானது. அத்துடன் ஈரப்பதமான சூழ்நிலைகளில் அவை அனைத்தும் பந்தின் பளபளக்கும் பக்கம் எந்த விதத்தில் இருக்கிறது என்பதை பொறுத்ததாகும். மேலும் ஓவல் மைதானத்தில் லேசான சறுக்கலை பெற முடிந்தால் நம்முடைய ஸ்பின்னர்களால் பிட்ச்சின் உதவி இல்லாமலேயே பந்தை காற்றில் சுழற்றி பேச வைக்கலாம். எனவே ஓவல் மைதானம் இந்தியாவுக்கு மிகவும் பொருந்தக்கூடிய மைதானமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : இந்த ஃபைனல் இல்லாம இந்தியாவுக்காக அதையும் சாதிப்பதே கேப்டனாக என்னோட லட்சியம் – ரோகித் சர்மா பேட்டி

அவர் கூறுவது போல அஸ்வின் – ஜடேஜா இருவருமே எந்த வகையான மைதானத்திலும் அசத்தும் திறமையை கொண்ட உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களாக நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். மறுபுறம் 2023 ஐபிஎல் தொடரிலேயே கொல்கத்தா அணியில் ரன்களை வாரி வழங்கிய ஷார்துல் தாக்கூர் இப்போட்டியில் அதே செயல்பாடுகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே சுழலுக்கு கை கொடுக்க தயாராக இருக்கும் ஓவல் மைதானத்தில் இந்தியா தங்களுடைய பலமான 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால் வெற்றி கிடைக்கலாம்.

Advertisement