WTC Final : இந்த ஃபைனல் இல்லாம இந்தியாவுக்காக அதையும் சாதிப்பதே கேப்டனாக என்னோட லட்சியம் – ரோகித் சர்மா பேட்டி

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியா தங்களை நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்பதை நிரூபிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்று இம்முறை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்தியதை போல இப்போட்டியிலும் வெற்றிக்கு இந்தியா போராடும் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இப்போது தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் கேப்டன்ஷிப் செய்ய உள்ளார்.

ரோஹித்தின் லட்சியம்:
ஏனெனில் 2022 ஜனவரியில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ரத்து செய்ய 5வது போட்டியில் காயத்தால் வெளியேறினார். அதைத்தொடர்ந்து வங்கதேச மண்ணில் நடைபெற்ற தொடரிலும் காயத்தால் வெளியேறிய அவர் சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டார். அதை விட அசால்டாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்றாலும் முக்கியமான 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியையே சந்தித்துள்ளது.

Rohit

அத்துடன் சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் தனது கேப்டன்ஷிப் மீதான விமர்சனங்களை பொய்யாக இப்போட்டியில் கோப்பை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார். இந்நிலையில் இந்த ஃபைனல் மட்டுமல்லாமல் அக்டோபரில் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை உட்பட ஓய்வு பெறுவதற்கு முன் 2 ஐசிசி தொடர்களை வெல்வதே கேப்டனாக தம்முடைய லட்சியம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டி துவங்குவதற்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேப்டனாக நான் அல்லது வேறு ஒருவர் அல்லது இதற்கு முன்பு இருந்தவர்கள் என அனைவரது வேலை இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நிறைய சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்வதாகும். எனக்கும் அதே வேலை தான். நான் போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டங்களை வெல்ல விரும்புகிறேன். அதற்காக தான் நீங்கள் விளையாடுகிறீர்கள். ஆம் சில பட்டங்களை வெல்வது எனக்கு சிறந்த தருணமாக இருக்கும். அத்துடன் சில சவாலான தொடர்களையும் வெல்ல வேண்டும்”

Rohit-Sharma

“ஆனால் அதே சமயம் அதற்காக இது போன்றவற்றை அதிகப்படியாக நினைத்து எங்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை போட நான் விரும்பவில்லை. ஏற்கனவே சொன்னது போல் நிறைய சாம்பியன் பட்டங்களை வெல்வதே ஒவ்வொரு கேப்டன்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் நானும் சாம்பியன் பட்டங்களை வெல்ல விரும்புகிறேன். விளையாட்டு என்பதே சாம்பியன் பட்டங்களை வெல்வதற்காக இருப்பதாகும். எனவே என்னை பொறுத்த வரை இந்த வேலையிலிருந்து நகரலாம் என்று நான் முடிவெடுக்கும் போது 1 அல்லது 2 சாம்பியன் பட்டங்களை வென்றிருப்பது நல்ல உணர்வாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : கிங், பிரின்ஸ் இதெல்லாம் ரசிகர்கள் கொடுத்த பேரு, ஆனா என்னோட கடமை அது தான் – கில் பற்றி விராட் கோலி பேட்டி

முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் ஏற்கனவே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக நியமிக்க பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு மறைமுகமான முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement