அஷ்வின் அப்டி சொன்னதுல என்ன தப்பு, நியாயமா ரோஹித்தை கேள்வி கேட்ருக்கணும் – கவாஸ்கர் அதிரடி விமர்சனம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மா இந்த ஃபைனலிலும் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாமல் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமானது.

TEam India Rohit Sharma

- Advertisement -

இத்தனைக்கும் 450க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் 3000க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ள அஸ்வின் இதுவரை 11 பேர் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார். அதனால் இதுவே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரன்கள் அடித்தார் என்பதற்காக தர வரிசையில் இருக்கும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை ஃபைனலில் கழற்றி விடுவீர்களா? என்று ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். அப்படி 10 வருடங்களுக்கு மேலாக வெற்றிகளில் பங்காற்றியும் நிலையான இடம் கிடைக்காததால் ஓய்வுக்கு பின் ஏன் பேட்ஸ்மேனாக வராமல் பவுலராக வந்தோம் என்று நினைத்து வருத்தப்படுவேன் என அஸ்வின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கவாஸ்கர் விமர்சனம்:
அதை விட ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இந்திய அணியினர் தற்போது சக வீரர்களாகவும் சீனியர்களாகவும் மாறிவிட்டதால் ஒருவருக்கொருவர் உதவுவதில்லை என்று அவர் கூறியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக 2019 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் பதவிக்காக விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோரிடையே விரிசல் ஏற்பட்டது என்றும் அதை ரவி சாஸ்திரி சமாதானம் செய்தார் என்று ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் சமீபத்தில் கூறியதை அது உண்மையாக்கும் வகையில் அமைந்தது.

kapil dev ashwin gavaskar

அந்த நிலையில் ஒருவரால் 3 – 4 பேரை மட்டுமே நண்பர்களாக வைத்துக் கொள்ள முடியும் என அஸ்வினுக்கு அந்த விவகாரத்தில் ரவி சாஸ்திரி நக்கலாக பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியினர் நட்பாக இருப்பதில்லை என்று அஸ்வின் கூறியதில் எந்த தவறுமில்லை என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அந்த கருத்து தமக்கு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது சோகமடைய வைக்கும் விஷயமாகும். ஏனெனில் போட்டி முடிந்ததும் நீங்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசாமல் உங்களுக்கு பிடித்த பாடல்கள் படங்கள் போன்றவற்றை நண்பர்களாக பேசலாம்”

- Advertisement -

“ஆனால் அது போன்ற அம்சங்கள் தற்போதைய இந்திய அணியில் நடைபெறவில்லை என்று தெரிய வருவது ஏமாற்றத்திற்குரியதாகும். இருப்பினும் கடந்த 20 வருடங்களில் இருந்து இந்திய வீரர்கள் தங்குவதற்கு தனி அறைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அது அதற்கு காரணமாக இருக்கலாம்” என்று கூறினார். மேலும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்த்த தமக்கு ரோகித் சர்மா ஏமாற்றத்தை கொடுத்ததாகவும் அவர் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

Gavaskar

அந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஷ்வினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை, சதமடித்து வெற்றியை பறித்த டிராவிஸ் ஹெட் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறுவார் என்று தெரிந்தும் ஏன் அதை பயன்படுத்தவில்லை என்பது போன்ற கேள்விகளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ரோகித் சர்மாவிடம் தேர்வுக்குழுவினர் கேட்டிருக்க வேண்டும் என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ் – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

“அவர்களிடம் முதலில் ஏன் ஃபீல்டிங் செய்தீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஈரப்பதமான சூழ்நிலையால் முதலில் பேட்டிங் செய்யவில்லை என்று டாஸ் வீசும் போது அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த கேள்வியை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவார் என்று தெரிந்தும் 80 ரன்கள் அடித்த பின்பே அவருக்கு எதிராக பவுன்சர்கள் வீசப்பட்டதற்கான காரணத்தை கேட்க வேண்டும். ஏனெனில் டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய வந்ததும் வர்ணனையாளர்கள் அறையில் நானும் ரக்கி பாண்டிங்க்கும் அவருக்கு எதிராக பவுன்சர் பந்துகளை வீசுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்” என கூறினார்.

Advertisement