இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ் – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

Stokes-and-Dhoni
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஷ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கி இருந்தது.

ENG vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை-6ஆம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களையும், இங்கிலாந்து அணி 237 ரன்களையும் குவித்தது.

பின்னர் 26 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

Ben Stokes

இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு இந்த போட்டியில் கேப்டனாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சாதனை ஒன்றினையும் தகர்த்துள்ளார். இந்த செய்தியானது தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அந்த சாதனை யாதெனில் : இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 ரன்களுக்கு மேல் கொண்ட இலக்கினை வெற்றிகரமாக சேசிங் செய்து அதிக வெற்றிகளை பெற்ற அணியின் கேப்டனாக தோனி நான்கு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது முறையாக இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ்-ஸின் தலைமையின் கீழ் 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கினை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : டெஸ்ட் வரலாற்றில் சச்சினின் வித்யாசமான தந்தை – மகன் சாதனையை சமன் செய்யப்போகும் விராட் கோலி, விவரம் இதோ

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கினை அதிகமுறை வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றியை பெற்றுத்தந்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளார். அதேபோன்று இந்த ஐந்து வெற்றிகளில் நான்கு வெற்றிகள் கிட்டத்தட்ட ஓவருக்கு நான்கு ரன்களுக்கு மேல் குவித்து அதிரடியாக கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement