IND vs WI : டெஸ்ட் வரலாற்றில் சச்சினின் வித்யாசமான தந்தை – மகன் சாதனையை சமன் செய்யப்போகும் விராட் கோலி, விவரம் இதோ

Sachin Virat Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்க உள்ளது. அதில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் புஜாரா கழற்றி விடப்பட்டது ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதது போன்றவை விமர்சனங்களை எழுப்பியது.

- Advertisement -

இருப்பினும் அதைத் தாண்டி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியினர் ஜாம்பவான் கேரி சோபர்ஸை சந்தித்து வாழ்த்து பெற்று முதல் போட்டி நடைபெறும் டாமினிக்கா மைதானத்தில் பயிற்சிகளை துவங்கியுள்ளனர். முன்னதாக இந்த மைதானத்தில் கடந்த 2011இல் நடைபெற்ற வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதின. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா 2வது போட்டியை போலவே இந்த டாமினிக்கா மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியை டிரா செய்து 1 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

தனித்துவமான சாதனை:
மேலும் அந்த சுற்றுப்பயணத்தில் சீனியராக விளையாடிய ராகுல் டிராவிட் தற்போது பயிற்சியாளராக இருக்கும் நிலையில் முதல் முறையாக அறிமுகமான விராட் கோலி தற்போது சீனியர் வீரராக களமிறங்க உள்ளார். மற்ற அனைத்து வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் 12 வருடங்கள் கழித்து தற்போது குரு சிஷ்யனாக இந்த மைதானத்தில் விளையாடுவது பற்றி விராட் கோலி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் டிராவிட்டுடன் புகைப்படம் எடுத்து மலரும் நினைவை பகிர்ந்துள்ளார். அதை விட 2011 சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சிவ்நரேன் சந்தர்பாலுக்கு எதிராக விராட் கோலி விளையாடினார்.

Shivanarine Chanderpaul

அப்படியே 12 வருடங்கள் உருண்டோடிய நிலையில் சிவ்நரேன் சந்தர்ப்பத்தால் அவர்களின் மகன் தக்நரேன் சந்தர்பால் தற்போது இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளார். அந்த வகையில் சிவ்நரேன் சந்தர்பாலை 12 வருடங்களுக்கு முன்பாக எதிர்கொண்ட விராட் கோலி தற்போது அவருடைய மகன் தக்நரேன் சந்தர்பாலை எதிர்கொள்ள உள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் ஒரு தந்தை மற்றும் மகனுக்கு எதிராக விளையாடிய 2வது இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான சாதனையை ஜூலை 12ஆம் தேதி துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி சமன் செய்ய உள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஜெஃப் மார்ஷ்க்கு எதிராக இளம் வீரராக சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். அதை தொடர்ந்து 19 வருடங்கள் கழித்து கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜெஃப் மார்ஷ் அவர்களின் மகன் ஷான் மார்ஷ்க்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் சீனியராக விளையாடினார். மேலும் 1992இல் இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக சீனியர் வீரராக ஜெஃப் மார்ஷ் விளையாடினார்.

அதே போல 2011இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி தன்னுடைய முதல் டெஸ்ட் தொடரில் ஷான் மார்ஷ் விளையாடினார். மறுபுறம் அதுவே இந்தியாவுக்காக சச்சின் விளையாடிய கடைசி வெளிநாட்டு டெஸ்ட் தொடராக அமைந்தது. அந்த வகையில் ஏற்கனவே பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கரின் நிறைய சாதனைகளை உடைத்து வரும் விராட் கோலி தற்போது இந்த தனித்துவமான தந்தை மகன் சாதனையையும் சமன் செய்ய உள்ளார்.

இதையும் படிங்க:சச்சின், சேவாக் ஈகோ பாக்காம என்கிட்ட வருவாங்க ஆனா – தற்போதைய இந்திய நட்சத்திர வீரர்கள் மீது கவாஸ்கர் ஆதங்கம்

இருப்பினும் சமீப காலங்களாகவே ஜோ ரூட், வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு நிகராக அல்லாமல் சுமாராக செயல்பட்டு விமர்சனங்களை சந்தித்து வரும் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து சிறப்பாக செயல்பட போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement