சச்சின், சேவாக் ஈகோ பாக்காம என்கிட்ட வருவாங்க ஆனா – தற்போதைய இந்திய நட்சத்திர வீரர்கள் மீது கவாஸ்கர் ஆதங்கம்

Gavaskar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியா தர வரிசையில் டாப் இடங்களில் இருந்தாலும் ஐசிசி உலகக் கோப்பைகளில் முக்கியமான தருணங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ளது. இத்தனைக்கும் சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மிரட்டும் இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் தோல்விகளை சந்தித்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் வெறும் கையுடன் வெளியேறி வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இந்த தோல்விகளுக்கு தரமான வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது போன்றவை காரணமாக பார்க்கப்படுகிறது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அதை விட அழுத்தமான போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்துவது கடைசியில் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் போராட்டத்தையும் வீணடிக்கிறது என்றே சொல்லலாம். எடுத்துக்காட்டாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் இறுதியில் ஹர்திக் பாண்டியா போராடியும் வெற்றி காண முடியவில்லை.

கவாஸ்கர் ஆதங்கம்:
அதே போல 2019 உலகக் கோப்பையிலும் அவர்கள் சொதப்பியது கடைசியில் ரவீந்திர ஜடேஜா – தோனியின் போராட்டத்தையும் தாண்டி தோல்வியை பரிசளித்தது. மேலும் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பியதால் பரம எதிரி பாகிஸ்தானிடம் முதல் முறையாக இந்தியா தோற்றது. அந்த தோல்விகளில் பாடத்தை கற்காத அந்த ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் மிடில் ஆர்டரில் ரகானே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோரின் போராட்டம் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வியை மட்டுமே தவிர்க்க உதவியது.

gavaskar

அப்படி தொடர்ந்து பல வருடங்களாக முக்கிய போட்டிகளில் சொதப்பி வரும் இந்த நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தம்மை போன்ற மூத்த வீரர்களிடம் ஆலோசனை கேட்க வருவதில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவர்களை விட மகத்தான சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், லக்ஷ்மன் போன்றவர்கள் அந்த காலத்தில் அடிக்கடி தம்மிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போதுள்ள வீரர்கள் யாருமே என்னிடம் வருவதில்லை. ஆனால் முன்பெல்லாம் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், லக்ஷ்மண் ஆகியோர் அடிக்கடி ஆலோசனை கேட்பார்கள். குறிப்பாக ஒரு சில பலவீனங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நீங்கள் கவனித்த ஆலோசனைகளை கொடுக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்பார்கள். தற்போதைய நிலைமையில் ஈகோ பார்க்காமல் இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்னால் ஆலோசனை கொடுக்க முடியும்”

Gavaskar

“ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகிய 2 பயிற்சியாளர்கள் அங்கே இருக்கின்றனர். எனவே நீங்கள் அதிகமான ஆலோசனைகளை கொடுத்து வீரர்களை குழப்பக் கூடாது என்பதால் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. இருப்பினும் ஒரே தவறை மீண்டும் செய்யும் போது உங்களுடைய டெக்னிக்கிற்கு என்ன ஆயிற்று? என்று பயிற்சியாளர்கள் நம்முடைய பேட்ஸ்மேன்களிடம் கேட்க வேண்டும்”

- Advertisement -

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் நம்முடைய பேட்ஸ்மேன்களை முன்னேற்ற முயற்சித்து வித்தியாசமான ஃகார்டை எடுக்க சொல்ல வேண்டும். குறிப்பாக லெக் ஸ்டம்ப்பை விட்டு மிடில் அல்லது ஆஃப் ஸ்டம்ப் ஃகார்டை எடுக்குமாறு அவர்களிடம் சொல்ல வேண்டும். ஒருமுறை விரேந்திர சேவாக் ஃபார்மின்றி ரன்கள் அடிக்க தடுமாறினார். அப்போது அவரிடம் “நீங்கள் ஆஃப் ஸ்டம்ப் ஃகார்டை எடுங்கள்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர் ஏன் என்று கேட்டார்”

Gavaskar

இதையும் படிங்க:தனது மனைவியுடன் சென்னை வந்திருக்கும் தல தோனிக்கு உற்சாக வரவேறு கொடுத்த ரசிகர்கள் – எதற்கு தெரியுமா?

“அப்போது “நீங்கள் ஃபுட் வொர்க் அடிப்படையில் அசத்தும் வீரர் கிடையாது. அதனால் பந்தை சந்திப்பதற்கு முன்பாகவே அவுட்டாக வாய்ப்புள்ளது. எனவே ஆஃப் ஸ்டம்ப்பை எடுத்தால் பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வருகிறதா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்” என்று அவரிடம் சொன்னேன். இது போல தான் பயிற்சியாளர்கள் தங்களுடைய உள்ளீடுகளை வீரர்களுக்கு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement