2023 உலக கோப்பையிலும் தோற்கணுமா? இளம் படை உருவாக்கும் சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்க – தேர்வுக்குழுவை விமர்சித்த கவாஸ்கர்

- Advertisement -

ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்திக்க பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

sarfaraz 2

- Advertisement -

ஆனால் அதை செய்யாத தேர்வுக்குழு ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பாதுகாப்பதற்காக ஃபைனலில் பேட்டிங் துறையினர் செய்த சொதப்பல்களின் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளனர். அதே சமயம் புஜாராவுக்கு பதிலாக ஐபிஎல் டி20 தொடரில் அசத்திய காரணத்தால் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழுவினர் அவர்களை விட கடந்த 3 வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் அசத்தி வரும் சர்ப்ராஸ் கானை மீண்டும் புறக்கணித்துள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது.

மிஸ் பண்ணிட்டீங்க:
அதை விட 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணம் துவங்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரும்பாலும் இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மீண்டும் அதே சீனியர் வீரர்கள் அடங்கிய அணியே களமிறங்க உள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா – விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்கள் என்பதால் ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் பெஞ்சில் அமர்ந்து விட்டு நாடு திரும்பப் போகிறார்கள் என்பது நிதர்சனமாகும்.

TEam India Rohit Sharma

அத்துடன் வரும் டிசம்பர் மாதம் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் துணை கேப்டனாக சுப்மன் கில் அல்லது அக்சர் படேல் போன்ற ஏதேனும் இளம் வீரரை நியமிக்காமல் மீண்டும் எவ்விதமான தொலைநோக்கு பார்வையுமின்றி ரகானே நியமிக்கப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அட்டைப்படம் மட்டுமே மாற்றப்பட்ட பழைய பஞ்சாங்கத்தை போன்ற இந்திய அணி விளையாட உள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனைத்து சீனியர்களுக்கு ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் வாய்ப்பை தேர்வுக்குழு தவற விட்டுள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் அணியில் மீண்டும் சீனியர் வீரர்களை பார்க்க வேண்டுமா என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Gavaskar

“டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்து போய் விட்டது. நாம் அதில் கோப்பையை வெல்ல தவற விட்டோம் என்பதால் தற்போது நம்முடைய அடுத்த பெரிய இலக்கு அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையாகும். எனவே நம்முடைய பெரிய சீனியர் வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடாமல் நீண்ட ஓய்வு எடுத்து அந்த உலகக் கோப்பையில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவதை நான் விரும்புகிறேன். தற்போதைய நிலைமையில் சீனியர் வீரர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் அல்ல”

இதையும் படிங்க:இதுக்கும் மேல அவர் என்னதான் பண்ணனும். மீண்டும் இந்திய அணியில் மறுக்கப்பட்ட வாய்ப்பு – இளவீரருக்கு ஏற்பட்ட சோகம்

“குறிப்பாக உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று கருதப்படும் சீனியர் வீரர்களுக்கு நீங்கள் பெரிய இடைவெளி கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் கடந்த 3 – 4 மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடியுள்ளனர். அந்த வகையில் சீனியர்களுக்கு ஓய்வெளித்து இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் நிறைய இளம் வீரர்கள் விளையாடியிருந்தால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மையாக அமைந்திருக்கும். எனவே இந்த சமயத்தில் தேர்வுக்குழுவினர் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement