- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் அவுட்டே இல்லை.. 2 காரணம் இது தான்.. இந்தியாவை நல்லா செஞ்சுட்டீங்க.. கவாஸ்கர் விளாசல்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா இம்முறை எங்களை சொந்த மண்ணில் சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை இந்தியாவுக்கு காண்பித்துள்ளது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பையும் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

மறுபுறம் 340 ரன்களை துரத்திய இந்தியா போராடாமலேயே 155க்கு சுருண்டு டிராவை கூட செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக அந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 33-3 என திணறிய இந்தியாவை இளம் வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் நங்கூரமாக விளையாடி காப்பாற்றப் போராடினார்.

- Advertisement -

சுமாரான தீர்ப்பு:

அந்த வாய்ப்பில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரை சதம் கடந்து 84 ரன்கள் எடுத்திருந்த போது கமின்ஸ் வீசிய பந்தை கீப்பர் திசையில் அடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த பந்து அவருடைய பேட்டில் பட்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியினர் அவுட் கேட்டார்கள்.

ஆனால் களத்தில் இருந்த நடுவர் அதை அவுட் கொடுக்காததை தொடர்ந்து அவர்கள் ரிவியூ எடுத்தனர். அப்போது ஸ்சினிக்கோவில் ஸ்பைக் இல்லாததால் ஜெய்ஸ்வால் அவுட் கிடையாது என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் வெறும் கண்ணால் பார்க்கும் போது பந்து அவருடைய பேட்டில் பட்டு செல்வது தெளிவாக தெரிவதால் அவுட் என்று மூன்றாவது நடுவர் அறிவித்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:

ஏனெனில் அந்த விக்கெட் திருப்பு முனையை உண்டாக்கி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் அது கண்டிப்பாக அவுட்டில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 3வது நடுவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் டெக்னாலஜியை பின்பற்றினால் அதை மற்றும் பின்பற்றுங்கள்”

இதையும் படிங்க: கிங் என்ற ஈகோ.. ஸ்டுப்பிட் என கவாஸ்கர் பாணியில் இந்தியாவின் காலை வாரிய கோலி, பண்ட்டை விளாசும் ரசிகர்கள்

“நான் பார்த்தது எல்லாம் வெறும் ஒளியியல் மாயை. ஸ்னிக்கோ என்ன சொன்னது? நேரான கோடு மட்டுமே காண்பிக்கப்பட்டது. எனவே அது அவுட்டில்லை” என்று கூறினார். அதாவது ஒளியியல் மாயையை அடிப்படையாக வைத்து டெக்னாலஜியையும் நம்பாமல் மூன்றாவது நடுவர் கொடுத்த தீர்ப்பு இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததாக கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அதே போல பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூவ் சுக்லாவும் நடுவர்களை விமர்சித்துள்ளது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -