மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா 99% இழந்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் 340 ரன்களை துரத்திய இந்தியா குறைந்தபட்சம் போராடி போட்டியை டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சுமாரான பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா நிதானமாக விளையாட முயற்சித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த கேஎல் ராகுலும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி குறைந்தபட்சம் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தொடாமல் இந்தியாவை டிரா செய்ய உதவுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
கிங் என்ற ஈகோ:
ஏனெனில் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த தொடர் முழுவதுமே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். அதனால் சச்சின் டெண்டுல்கர் போல கவர் டிரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று அவருக்கு சுனில் கவாஸ்கர், ஆடம் கில்கிரிஸ்ட் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
அதைப் பின்பற்றி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் ஸ்டார்க் வேகத்தில் அதே போல அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் கிங் என்று இத்தனை நாட்களாக பாராட்டியதால் விராட் கோலிக்கு ஈகோ வந்து விட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் இந்தத் தொடரை வெல்லவும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்லவும் இப்போட்டியில் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா சூழ்நிலையில் இந்தியா இருந்தது.
ஸ்டுப்பிட் விமர்சனம்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு விதமாக அவுட்டானால் கூட ரசிகர்கள் ஆறுதல் அடைந்திருப்பார்கள். ஆனால் மீண்டும் அதே அவுட் சைட் ஸ்டம்ப் பந்தில் விராட் கோலி நடையை கட்டியதே ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் தேவையின்றி டி20 போல அவுட்டானதால் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் முட்டாள் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: இன்னும் 3 விக்கெட் போதும்.. ஹர்பஜன் சிங்கின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா
அதன் காரணமாக இம்முறை 104 பந்துகள் எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலானார். ஆனால் அதை வீணடிக்கும் வகையில் டிராவிஸ் ஹெட் போன்ற பகுதி நேர பவுலரிடம் இறங்கி சென்று அடித்த ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார். அதனால் கவாஸ்கர் போல அவரை ஸ்டுப்பிட் என்று ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.



