இன்னும் 3 விக்கெட் போதும்.. ஹர்பஜன் சிங்கின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah-and-Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்ட இந்த தொடர் தற்போது நமக்கு சாதகமாக செல்லாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்பஜனை முந்த காத்திருக்கும் பும்ரா :

ஆனாலும் இந்த தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருவதால் அவர் மட்டுமே இந்த தொடரில் நம்பிக்கையுடைய வீரராக இருந்து வருகிறார். குறிப்பாக இந்திய அணி பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போதும் வெற்றிபெற அவரே மிக முக்கிய காரணமாக இருந்தார். முதல் போட்டி மட்டுமன்றி அடுத்த மூன்று போட்டிகளிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருகிறார்.

- Advertisement -

அவரை தவிர்த்து மற்ற எந்த வீரரும் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் முதல் இடத்தில் நீடிக்கிறார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பும்ரா இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தது, 13 முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது, குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தது என பல்வேறு சாதனைகளை பும்ரா இந்த தொடரில் படைத்துள்ளார்.

- Advertisement -

அதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவர் ஹர்பஜன் சிங்கின் சாதனை ஒன்றினையும் முறியடிக்கும் வாய்ப்பை நோக்கி தற்போது நகரவுள்ளார். அந்த வகையில் :

இதையும் படிங்க : நீங்க பண்ண வரைக்கும் போதும்.. பேசாம ரிட்டயர்டு ஆயிடுங்க.. ரோஹித் சர்மாவை – விமர்சிக்கும் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஹர்பஜன் சிங் 32 விக்கெடுகளை வீழ்த்தியிருந்தார். அவர்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் விளையாட இருக்கும் பும்ரா மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஹர்பஜன் சிங்கையும் முந்த வாய்ப்புள்ளது. நிச்சயம் அவர் அந்த சாதனையும் நிகழ்த்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement