ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நடப்பு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலிருந்து இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். அவரது தலைமையில் தற்போது மூன்று ஆட்டத்தில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு தோல்வி மற்றும் ஒரு டிராவை பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஓய்வை அறிவித்து விடுங்கள் ரோஹித் சர்மா :
இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாகவே டெஸ்ட் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் இருந்து வந்த வேளையில் இந்த தொடரில் நான்காவது போட்டியிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக களமிறங்கி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார்.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்சிலும் 40 பந்துகளை சந்தித்து 9 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இப்படி அவர் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதோடு கடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒட்டு மொத்தமாகவே அவர் 164 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதில் அவர் சராசரி 10 ரன்கள் மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பார்டர் பாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் அவர் அதிகபட்சமாக 10 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்த போட்டியில் இந்திய அணியை நாங்கள் எளிதில் வீழ்த்த இதுவே காரணம் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி
இதன் காரணமாக அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் பலரும் இனி டெஸ்ட் கிரிக்கெட்க்கு நீங்கள் வேண்டாம் என்றும் நீங்கள் ஓய்வு பெற்று பும்ரா கேப்டனாக மாறினால் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்றும் தங்களது கருத்துக்களை காட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



