தம்பி விராட் கோலி செஞ்சதை மறந்துட்டிங்களா? அவங்க இதை செஞ்சா தாங்குவிங்களா? இளம் வீரரை சாடிய கவாஸ்கர்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 13வது போட்டியில் பஞ்சாப் அணி லக்னோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 172 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பஞ்சாப் அதிரடியாக விளையாடி 16.2 ஓவரில் 177-2 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப் பெற்றது.

பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 69, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52*, நேஹல் வதேரா 43* ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினர். லக்னோ அணிக்கு அதிகபட்சமாக திக்வேஷ் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அந்தப் போட்டியில் பஞ்சாப் துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யாவை 8 ரன்னில் திக்வேஷ் அவுட்டாக்கினார்.

- Advertisement -

தேவையற்ற ஆட்டம்:

அதனால் ஆர்யா ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் ஓடிவந்த லக்னோ வீரர் திக்வேஷ் சிங் தமது கையில் ஏதோ எழுதி வெளியே போங்கள் என்ற வகையில் வழியனுப்பி விக்கெட்டை கொண்டாடினார். அதற்குப் போட்டியின் முடிவில் வெற்றியைப் பெற்ற பஞ்சாப் ரசிகர்கள் மைதானத்திலேயே அதே போல கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தார்கள்.

இந்நிலையில் திக்வேஷ் சிங் இப்படி கொண்டாடியது தேவையற்றது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். மேலும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போதெல்லாம் இதே போல கொண்டாடினார்கள் தாங்குவீர்களா? என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் 2017இல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் இப்படி செய்து கடைசியில் விராட் கோலியிடம் அடி வாங்கியதை மறந்து விடாதீர்கள் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் சாடல்:

இது பற்றி நேரலை வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு. “முந்தைய பந்தில் பேட்ஸ்மேன் பௌண்டரி அல்லது சிக்ஸர் அடித்த பின் விக்கெட்டை எடுத்து அதை இப்படிக் கொண்டாடுவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் முதல் 5 பந்துகளில் ரன்கள் கொடுக்காமல் கடைசிப் பந்தில் விக்கெட்டை எடுத்து விட்டு இவ்வாறு கொண்டாடுவதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் இந்த விஷயத்தை மாத்தியே ஆகனும்.. இல்லனா லக்னோ அணிக்கு தான் சிக்கல் – ஹர்பஜன் சிங் கருத்து

“இதே போல ஒரு பவுலர் செய்த பின் விராட் கோலி என்ன செய்தார் என்பது நமக்குத் தெரியும். விராட் கோலி அவரை பௌண்டரி மேல் பவுண்டரிகள் அடித்தார்” எனக் கூறினார். இந்த நிலையில் அப்படிக் கொண்டாடியதற்காக 25% சம்பளம் அபராதம் மற்றும் 1 கருப்புப் புள்ளியை திக்வேஷ்க்கு தண்டனையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement