பினிஷெர்னா கடைசியில் தான் களமிறங்கணும்னு ரூல்சா? ராஜஸ்தானை விளாசிய கவாஸ்கர் – என்ன நடந்தது?

Gavaskar
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 2-ஆம் தேதி நடைபெற்ற 47-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா 5 தொடர் தோல்விகளுக்கு பின் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடுமையாக போராடி 152/5 ரன்கள் எடுத்தது.

RR vs KKR

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 (49) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் டிம் சவுத்தி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 153 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 158/3 ரன்களை எடுத்து கச்சிதமான வெற்றி பெற்றது. அந்த அணிக்கு பாபா இந்திரஜித் 15 (16) ஆரோன் பின்ச் 4 (7) ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் நடு வரிசையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 34 (32) நிதிஷ் ராணா 48* (37) ரிங்கு சிங் 42* (23) ஆகியோர் தேவையான ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

காப்பாற்றிய ஹெட்மயர்:
இப்போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் பங்கேற்ற 10 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தாலும் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு ஏற்கனவே 3 சதங்கள் அடித்து முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 22 (25) ரன்களிலும் தேவதூத் படிக்கல் 2 (5) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த கருண் நாயர் 13 (13) ரியன் பரக் 19 (12) போன்றவர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

Ashwin Hetmayer

அதன் காரணமாக ஏற்பட்ட சரிவை தாங்கும் வகையில் பேட்டிங் செய்த கேப்டன் சாம்சனும் 54 (49) ரன்களில் கடைசி நேரத்தில் அவுட்டானதால் 115/5 என தடுமாறிய ராஜஸ்தான் 150 ரன்களை தாண்டுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (13) ரன்கள் விளாசி போராட்ட பினிஷிங் செய்து 150 ரன்களை கடக்க வைத்தார். இந்தப் போட்டி மட்டுமல்லாது இதுபோல இந்த வருடம் நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கும் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக விளையாடுவதால் அந்த அணியின் பினிஷராக கருதப்படுகிறார்.

- Advertisement -

பினிஷெர்னா சட்டமா:
அதன் காரணமாக என்ன நடந்தாலும் அவரை குறைந்தது 15 – 16 ஓவர்களுக்கு பின்புதான் களமிறக்க வேண்டும் என்ற முடிவில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் விடாப்பிடியாக இருந்து வருகிறது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 18-வது ஓவரில் களமிறங்கி அதிரடியாக 27* ரன்கள் குவித்த அவரை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பியிருந்தால் இன்னும் கூடுதலான ரன்கள் வந்திருக்குமென்றும் பினிஷெர் என்றால் கடைசி நேரத்தில் தான் களமிறங்க வேண்டும் என்ற ரூல்ஸ் எதுவும் உள்ளதா என்று இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ராஜஸ்தான் அணி நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Shimron Hetmayer

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “சில வீரர்களை பினிஷெர் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். அதனால் அவர்கள் 14 அல்லது 15 போன்ற ஓவர்களுக்கு பின்புதான் களமிறங்க வேண்டும் என்ற வரையறுக்கப்படாத விதியை வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது சரியான முடிவல்லை. அவர் (ஹெட்மயர்) நல்ல பார்மில் இருக்கும்போது 11-வது ஓவரில் விக்கெட் விழுந்தாலும் உடனடியாக அவரை களமிறக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கருண் நாயர் அவுட்டானதும் அவர் களமிறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக ஹெட்மயர் இருக்கும் பார்முக்கு கூடுதலாக 20 – 30 ரன்கள் அடித்திருப்பார். மேலும் கொல்கத்தாவும் 152 ரன்களை கடைசி ஓவரில் தான் எட்டிப் பிடித்தது என்ற நிலைமையில் அந்த 20 – 30 ரன்கள் கண்டிப்பாக ராஜஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கும்.

இதையும் படிங்க : கொல்கத்தா டீம்ல மட்டும் இருந்திருந்தா இந்நேரம் அவரு காணாம போயிருப்பார் – நட்சத்திர வீரரின் கோச் குற்றசாட்டு

ஏனெனில் அந்த அணியில் சஹால், அஷ்வின், போல்ட் போன்ற தரமான பவுலர்கள் நேற்றைய போட்டியில் அதிக ரன்கள் இல்லாத காரணத்தால் முடிந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய போதிலும் வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. எனவே ராஜஸ்தான் மட்டுமல்லாது அனைத்து அணி நிர்வாகங்களும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப பினிஷெர் என்று கருதும் அதிரடி வீரர்களை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையேல் கையிலிருக்கும் வெற்றி பறிபோய் விடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement