கொல்கத்தா டீம்ல மட்டும் இருந்திருந்தா இந்நேரம் அவரு காணாம போயிருப்பார் – நட்சத்திர வீரரின் கோச் குற்றசாட்டு

Kuldeep
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி போட்டியில் அனல் தெறிக்க விட்டு தங்களது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் 27 வயது இளம் வீரர் குல்தீப் யாதவ் சமீப காலங்களில் பாரமில்லாமல் தவித்து வந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் அப்படியே தலைகீழாக இழந்த தனது பார்மை இரு மடங்காக திரும்பப் பெற்றுள்ளார் என்று கூறுமளவுக்கு மிரட்டலாக பந்துவீசி வருகிறார்.

Kuldeep yadhav 2

- Advertisement -

கடந்த 2016 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட தொடங்கிய அவர் வித்தியாசமாக சுழல் பந்துகளை வீசி எதிரணிகளை திணறடித்ததால் இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி முதல் 2019 உலககோப்பை வரை அபரித வளர்ச்சி பெற்ற அவர் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல்பந்து வீச்சாளராகும் அளவுக்கு உயர்ந்தார்.

குல்தீப் கம்பேக்:
ஆனால் அதன்பின் ஐபிஎல் தொடரில் அவரின் பந்துவீச்சு சரியவே இந்திய அணியில் மெல்லமெல்ல கழற்றி விடப்பட்டார். மேலும் 2019 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவருக்கு 2020இல் 5 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை பெஞ்சில் அமர வைத்து 2021 ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் காயமடைந்தவதற்கு முன்பு வரை அணிக்குள் ஒரு வேலைக்காரனை போல் தரக்குறைவாக நடத்தியதாக அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே கடந்த மாதம் குற்றம்சாட்டியிருந்தார்.

Kuldeep

அதன்பின் கொல்கத்தா அணி நிர்வாகம் கழற்றி விட்ட நிலையில் சமீபத்திய ஏலத்தின் போது 2 கோடி என்ற அடிப்படை விலையில் அவரை டெல்லி அணி நிர்வாகம் நம்பி வாங்கி நேரடியாக வாய்ப்பையும் கொடுத்தது. அதை பயன்படுத்திய அவர் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் ஜொலிக்கிறார். அதைவிட இதுவரை டெல்லி பதிவு செய்துள்ள 4 வெற்றிகளிலும் அவர் மட்டுமே ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் என்பது ஆச்சர்யமாகும்.

- Advertisement -

காணாமல் போயிருப்பார்:
அத்துடன் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி பங்கேற்ற 2 போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசிய அவர் ஆட்டநாயகன் விருதை வென்று பழிக்கு பழி வாங்கினார். மொத்தத்தில் தன்னை வேண்டாம் என்று கொடுமைபடுத்தி வெளியே அனுப்பிய கொல்கத்தாவிற்கு பதிலடி கொடுத்து டெல்லியின் நம்பிக்கை நாயகனாக அவதரித்து இந்திய அணிக்குள் மீண்டும் நுழையும் அளவுக்கு குல்திப் யாதவ் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதுநாள்வரை கொல்கத்தா அணியில் இருந்திருந்தால் அவர் கிரிக்கெட்டிலிருந்தே காணாமல் போயிருப்பார் என்று அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

Kuldeep Yadhav Kapil Paney

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா அணியில் இருந்த போது குல்தீப் மிகவும் டென்ஷனாக என்னிடம் “சார் நான் ஒரு வலைப்பயிற்சியை கூட தவற விடாமல் கடினமாக உழைக்கிறேன் ஆனாலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, நான் என்ன செய்வது” என்று கேட்டார். அதற்கு பொறுமையாக காத்திரு, நேரம் வரும் என்று பதிலளித்தேன். அந்த கடினமான தருணம் அவருக்கு தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சியை கொடுத்தது. அதன் காரணமாக கான்பூர் உட்பட அனைத்து உள்ளூர் கிரிக்கெட்டிலும் பங்கேற்க தொடங்கியுள்ள அவர் தன்னம்பிக்கை மிகுந்த பயமறியாத பவுலராக தற்போது மாறியுள்ளார்”

- Advertisement -

“சொல்லப்போனால் அவரை வெளியே அனுப்பி வைத்து கொல்கத்தா அணி நிர்வாகம் நல்ல காரியத்தை செய்தது. இன்னும் ஒரு வருடம் அங்கு குல்தீப் இருந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை குறைந்து கிரிக்கெட்டிலிருந்தே காணாமல் போயிருப்பார். ஏனெனில் அவர்கள் ஒரு வருடம் (2021இல்) அவரை தக்கவைத்து எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

kuldeep-yadav

அதேபோல் வெறும் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு டெல்லி அவரை வாங்கியபோது “குறைவான விலை என்று பார்க்க வேண்டாம். உனக்கு ரிக்கி பாண்டிங் போன்ற பயிற்சியாளர் கொண்ட நல்ல அணி நிர்வாகம் கிடைத்துள்ளது. அதில் உனது திறமையை காட்டு” என்று கூறினேன். அதற்கு அவர் “இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய கடுமையாக முயற்சிப்பேன்” என்று பதிலளித்தார்” என கபில் பாண்டே கூறினார்.

- Advertisement -

இப்படி இந்திய அணிக்குள் மீண்டும் கால்தடம் வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள குல்தீப் யாதவ் கொல்கத்தா அணியில் இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பார் என கூறும் கபில் பாண்டே அவரை வெளியே விட்டதற்கு மிகவும் நன்றி என கூறினார்.

இதையும் படிங்க : சாதிக்காமல் வீட்டுக்கு வரமாட்டேன் ! ஐபிஎல் தொடரால் 9 வருட வைராக்கியத்தை நிஜமாக்கிய இளம் மும்பை வீரர்

அவர் கூறுவது போல கடந்த சீசன்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் தக்கவைத்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரையும் ஒருசில போட்டிகளில் சொதப்பினார்கள் என்பதற்காக தற்போது கொல்கத்தா நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்துள்ளது. அவர்களுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement